பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 265

எடின்பர்க் நகரில் நடந்த முடி சூட்டு விழாவில் சார்லஸ் பேசும் போது, 'நான் இங்கிலாந்து நாட்டுக்கு மட்டும் தான் மன்னன். ஆனால், வில்லியம் ஹார்வி, மருத்துவ உலகுக்கும் - மக்கள் அபிமானத்துக்கும் மன்னர் என்று பாராட்டினார்.

உலகத்துக்கு இதயம் என்ற உடற்கூறு ஆராய்ச்சியை வழங்கி, பல லட்சக்கணக்கான மக்கள் உயிரைக் காப்பாற்றி வந்த வில்லியம் ஹார்வி, 1659-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் காலமானார்!’

ஏப்ரல் ஃபூல் தினமான 1.4.1578-ஆம் ஆண்டில் பிறந்து, 79-வயது வரை வாழ்ந்து, இதயத்துறை தந்தை என்று உலகம் போற்ற இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் வில்லியம் ஹார்வியைப் போல, மாணவ-மணிகளே நீங்களும் சாதனைச் சிகரத்திலே புகழோடு வீற்றிருக்க வேண்டாமா?

இது தானே 'தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற தோற்றத்தின் கடமை? திருவள்ளுவர் பெருமானின் தமிழ்மறை நெறிக்கு இலக்கணமாகத் திகழ்வீர்களா?