பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இசம்கள் என்றால், அவையும்; விஞ்ஞானக் கொள்கைகளே!

முேதாய விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், கல்வித் துறை விஞ்ஞானம், பொருளாதார விஞ்ஞானம், பொதுவுடைமை விஞ்ஞானம், தொழிற்துறை விஞ்ஞானம், மருத்துவத் துறை விஞ்ஞானம், சட்டத் துறை விஞ்ஞானம், மதத் துறை விஞ்ஞானம், வானியல் துறை விஞ்ஞானம், நிலவியல் துறை விஞ்ஞானம், வணிகத் துறை விஞ்ஞானம், வாழ்வியல் துறை விஞ்ஞானம் என்று இவ்வாறு பல வகைத் துறைகளில் அறிவியல் சிந்தனைகள் ஊடுருவி, அந்தந்தத் துறைகளுக்குப் புதுப்புதுக் கொள்கைகளை உலக அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளதை நாம் வரலாற்றில் படித்துணர்கின்றோம்.

"SCENCE", விஞ்ஞானம் என்ற சொல்லைப் பற்றிச் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற அகராதி கூறும் விளக்கம் என்ன தெரியுமா?

'அறிவியல், விஞ்ஞானம், துணங்கியல் விஞ்ஞான ஆராய்ச்சி முறைமைக் கூறுகளின் தொகுதி, இயல் நூல், இயற்கைப் பொருள்களை ஆராயும் நூற்றுறைகளின் தொகுதி, அறிவு; EXACT SCENCE அளவறிவுக்குரிய, இயல் நூல், MORAI sciENCE ஒழுக்க ஆய்வுத் துறை, NATURAI sciENCE இயல் நூல், இயற்கைப் பொருளாய்வுத் துறை புற நிலை ஆய்வு நூல் இயற்கையின் பருப்பொருள்களை ஆயும் நூல் தொகுதி, PoடITICAL sciENCE அரசியல் ஆய்வுத் துறை, PURE SCENCE எண்பொருள் ஆய்வு நூல், THE DISMAL sciENCE அரசியல் பொருளாதார நூல் என்ற பொருள்களை எல்லாம் கூறுகின்றது.

எனவே, மனிதனுடைய வாழ்க்கைக்குரிய ஒவ்வொரு துறையிலும் விஞ்ஞானம் நீறு பூத்த நெருப்புபோல இருந்து வருகிறது. அந்தந்த துறை யில் தோன்றும் அறிவியல் வித்தகர்கள், தங்களது ஆராய்ச்சி எனும் துருத்தி யால் அந்த நெருப்பை ஊதும்போதுதான், அந்தத்துறைகளிலே இருந்துதத்து வங்களும், தனித்தனிக் கோட் பாடுகள் என்பவைகளும் சுடருதறுகின்றன.