பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானி பி.சி.ரே!

மாணவ மணிகளே!

வேதியியல் விஞ்ஞானத் துறையில் அரிய சாதனைகளைச் சாதித்த பிரஃபுல்லா சந்திர ரே, இன்றைய பங்களாதேஷ் நாட்டிலுள்ள ராருளி கட்டிபாரா என்ற கிராமத்தில் 2.8.1861-ஆம் ஆண்டில் பிறந்தார்.

ஆரம்பக் கல்வியைத் தனது சொந்த ஊரில் கற்ற பின்பு, அன்றைய கல்கத்தா நகரிலுள்ள மாநிலக் கல்லூரியில் பி.சி.ரே. பட்டப் படிப்பைப் பெற்றார். 'கில் கிறிஸ்ட் என்ற கல்வித் துறை வித்தகராக அவர் விரும்பினார். 1882-ஆம் ஆண்டில் அத் துறையில் சேர்ந்தார்.

இந்தக் கல்கத்தா படிப்பு இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிப்பதற்குப் போதாது என்று கேள்விப்பட்ட ரே, அதே மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் கல்லூரி முதல்வரால் - விஞ்ஞானத் துறையில், குறிப்பாக வேதியியல் விஞ்ஞானி மாணவராகச் சேர்ந்துக் கல்லூரிப் பேராசிரியர்கள் பாராட்டும் அளவுக்கு - வேதியியல் துறையின் மானவராக அவர் விளங்கினார்.

ஏராளமான விருதுகளையும், உபகாரச் சம்பளமும் பெற்ற ரே, அதே கல்லூரியிலிருந்து படித்துக் கொண்டே எடின்பர்க் பல்கலைக் கழக வேதியியல் துறைக்குத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பிறகு, எடின்பர்க் பல்கலைக் கழகத்தில்சேர்ந்து 1888-ஆம் ஆண்டில் வேதியியல் விஞ்ஞானப் பட்டப் படிப்பில் D.Sc., பட்டம் பெற்றார்.

எடின்பர்க் பல்கலைக் கழகத்தின் பட்டப் படிப்பை முடித்த பி.சி.ரே, மீண்டும் 1888-ல் இந்தியா வந்தார். கொல்கொத்தா நகரில் ஏற்கெனவே தான் படித்த மாநிலக் கல்லூரியில் வேதியியல் துறையில் துணைப் பேராசிரியர் ஆனார்.

வங்காளத்தில் உள்ள ராயல் சொசைட்டி நடத்தும் பத்திரிகையில் Nitrites அதாவது, "வெடியக் காடியின் உப்புச் சத்து" என்ற வேதியியல் பொருள் பற்றி அதுவரை அவர் ஆராய்ச்சி செய்தவற்றைக் குறிப்பிட்டார்.