பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 269

பேரறிவாளன் பிளேட்டோ கருத்துகளும், கீழ்த் திசைக்குரிய மறை மெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தத்துவங்களுக்கு பிளேட்டோனிசம் PLATONISM என்று பெயர்.

தனி மனிதன் ஒருவன் ஒரு நாட்டில் செய்யும் சூழ்ச்சித் திறன் முறைச் செயல்களுக்கும், அவனது அரசியல் நடைமுறைகளுக்கும் பெயர் மாக்கியவல்லிசம் MACHAVELLISM எனப்படும்.

புரோகிதர்கள் செய்யும் செயல்களுக்கு, அவர்களது மனப்பான்மை களுக்கு புரோகிதர் நலம் பேணும் அதிக அதிகாரங்களைப் பெற்ற தத்துவங் களுக்குப் பெயர் சாக்ரெடோடலிசம் SACREDOTALISM என்கிறது. வரலாறு. புல்லறிவாளர்க்கும் - அந்தப் புன்மைக் கும்பலை அடக்குதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் என்ன பெயர் தெரியுமா மாணவமணிகளே? ஸ்சியோலிசம் SCCOLISM என்று பெயரிட்டிருக்கிறார்கள் சான்றோர். கூட்டாட்சி அமைப்பில் பிரிவினையை உருவாக்குவது, அல்லது அந்தத் தத்துவத்திற்கு ஆதரவு திரட்டிப் பிரிவினை மனப்பான்மையை வளர்ப்பதற்குப் பெயர், செப்பரேட்டிசம், SEPARATISM.

சமுதாயத்தில் உயர்வு-தாழ்வு, மேல் - கீழ் வகுப்புணர்ச்சிகளை உண்டாக்கும் குழப்பங்களுக்கு - செக்டியோனலிசம், SECTIONALISM என்று பெயர்.

பொது நலக் கூட்டுத் தத்துவம், சம தரும லட்சியங்கள், உடைமைகளைப் பொதுமைக் கோட்பாடுகளுடன் உயர்த்தும் தத்துவங்களே சோசியலிசம் SOCIALSM ஆகும்.

அரசியல், ஒழுக்கம், கல்வி போன்ற ஒரு நாட்டின் துறைகளில் மதச் சார்பின்மை என்ற லட்சியங்களை நிலை நிறுத்தும் தத்துவங்களை @gšų;sofisiò SECULARISM sisituit.

அரசியல் கிளர்ச்சிகளின் தன்மைகள், இலக்கியத் துறையில் எழுச்சியை உருவாக்கும் உணர்ச்சிகளையுடைய அறிவுக் கோட்பாடு களுக்கு சென்சேஷியனலிசம் (Sensationalism) என்று பெயர்.

அண்ணல் காந்தியடிகள் நாட்டுக்காகச் செய்த தியாக ஒழுக்கச் சிந்தனைகளைக் காந்தியச் சிந்தனைகள் என்று பெயரிட்டாலும், உலக நாடுகள் அந்த மனித நேயரின் பண்பாட்டு இயல்புகளைக் காந்தியிசம் (GANDHSM என்று போற்றுகின்றன. மாணவ-மாணவியர்களே!

இலங்கை காந்தி என்று கூறப்படும் செல்வ நாயகம் என்ற தமிழ்ப் பெருமகனும், அமெரிக்கக் காந்தி என்ற மார்ட்டின் லூதர் கிங் என்ற கறுப்பர் குலத் திலகமும், ஆப்ரிக்கக் காந்தி என்று இன்றும் நடமாடும் நெல்சன் மன்டேலாவும், காந்தீயிசம் தந்த வாரிசுகள் - மாணவமாணவிகளே! அதற்கு அறிவே துணை