பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய பிரதமர்கள் யார் யார்? எந்தெந்த ஆண்டுகளில்?

மாணவ-மணிகளே!

நம்மை ஆண்ட இந்தியப் பிரதமர்களது வரலாற்று விவரங்களை மாணவர்களாகிய நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால், அவரவர் குறிப்புக்களை மட்டுமே வழங்கியுள்ளோம்.

நமது இந்திய நாடு, பாரத பூமி, 1947-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15-ஆம் நாளில், ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது.

அண்ணல் காந்தியடிகள் அந்த விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று, இங்லிஷ்காரர்களிடம் செங்களமோ, வெங்களமோ காணாமல், அறப்.போராட்டங்கள் மட்டுமே ஆற்றி, சுதந்திரம் பெற்றுத் தந்த பிதா மகனாக விளங்கினார்.

அந்த மனிதப் புனிதரின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமராக, மனிதருள் மாணிக்கம் என்று மக்களால் மதிக்கப்பட்ட மாண்புமிகு நேரு பெருமகனார் 18.8.1947-ஆம் ஆண்டில் பதவி ஏற்று, 27.5.1964-ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆட்சி செய்தார்.

பிரதம மந்திரியாகப் பணியாற்றி வந்த பண்டித நேரு அவர்கள், எதிர்பாரா விதமாக நோய்வாய்ப்பட்டு மரணமடையவே, தேச பக்தர் குல்சாரிலால் நந்தா, மே மாதம் 27-ஆம் நாள் முதல், ஜூன் 9ந் தேதி வரைத் தற்காலிகப் பிரதம மந்திரியாகப் பணிபுரிந்தார்.