பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 273

இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரியாக சுதந்திரப் பேரொளியான லால் பகதூர் சாஸ்திரி, ஜூன் திங்கள் 9-ஆம் நாள் 1964-ஆம் ஆண்டன்று பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். தமிழ்ப் பெருமகன் காமராசர் அப்போது, அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவைக்குத் தலைவராக இருந்ததால், இந்தப் பிரதமர் தேர்வு அமைதியாக நடைப்பெற்றது.

தலைமை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, இரஷ்யா சென்று தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்பு, அன்றிரவே அவர் தாஷ்கண்டு நகரில் ஜனவரி 11-ஆம் நாள் 1966-ஆம் ஆண்டன்று இயற்கை எய்தினார்.

குல்சாரிலால் நந்தா மீண்டும் இரண்டாவது முறையாக, ஜனவரி 11-ஆம் நாள் 1966-ஆம் ஆண்டன்றே தற்காலிகப் பிரதம மந்திரிப் பதவியை எற்றார். அவர் அந்தப் பதவியில் 24.1.1966-ஆம் ஆண்டு வரை இருந்தார்.

பாரதத்தின் மூன்றாவது பிரதம மந்திரியாக, நேரு

பெருமகனார் செல்வியான திருமதி இந்திரா காந்தி, கடும் போட்டிக்கு இடையே, பெருந்தலைவர் காமராசருடைய செயற்கரிய கட்சிச் செயல்களால், ஜனவரி 24-ஆம் நாள் 1965-ஆம் ஆண்டன்று இந்தியப் பிரதமரானார்.

அதற்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி வாய்ப்பை இழந்ததால், அவர் மார்ச் மாதம் 24-3-1977-ஆம் ஆண்டன்று தனது பிரதமர் பதவியை விட்டு விலகினார்.

நான்காவது பிரதம மந்திரியாக, 1977-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஜனதா கட்சி சார்பாக வெற்றி | பெற்ற காங்கிரஸ் விடுதலைப் போராட்ட வீரர் | மொரார்ஜி தேசாய், திருமதி இந்திரா காந்தி பிரதமர் | பதவியை விட்டு விலகியதும், மார்ச் மாதம் 24-ஆம் தேதி 1977-ஆம் நாளன்று பதவி ஏற்றார். அவர் அந்தத் தலைமை அமைச்சர் பதவியில், ஜனதா கட்சிப் பிரதம மந்திரியாக, 28-7-1979-ஆம் ஆண்டில் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.