பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 275

மறுபடியும் காங்கிரஸ் கட்சியின் பத்தாவது பிரதம மந்திரியாக பி.வி.நரசிம்ம ராவ் ஜூன் 21-ஆம் நாள், 1991-ஆம் ஆண்டு முதல் - மே மாதம் முதல் தேதி 1996-ஆம் ஆண்டு வரை இந்தியத் தலைமை அமைச்சர் பதவியிலே பணி ஆற்றினார்.

இதற்கிடையில் பி.வி.நரசிம்மராவ் மே முதல் தேதியில் தனது பதவியை விட்டு விலக நேர்ந்ததால், - - அந்த இடைவெளியான மே திங்கள் 16-ஆம் தேதி அன்று அடல் பிகாரி வாஜ்பேயி பாரதிய ஜனதா கட்சி சார்பாகப் பதினொன்றாவது பிரதம மந்திரியாகப் பதவியில் அமர்ந்து, ஜூன் முதல் தேதி 1996-ஆம் ஆண்டிலேயே அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

இந்தியாவின் பன்னிரண்டாவது பிரதம மந்திரியாக, எச்.டி.தேவே கெளடா, 1.6.1996- ஆம் ஆண்டன்று பதவி ஏற்றார். | 21.4.1997- ஆம் ஆண்டன்று அவரும் தனது | பதவியை விட்டு விலகினார்.

ஏப்ரல் 21-ஆம் நாள் 1997-ஆம் ஆண்டன்று, ஐ.கே.குஜ்ரால் பதின்மூன்றாவது பிரதம மந்திரியாகப் பதவி ஏற்ற அவர், அதே ஆண்டில் நவம்பர் 28-ஆம் நாள் 1997 - அன்று தனது பதவியை விட்டு

விலகினார்.

அப்போது நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதால், அடல் பிகாரி வாஜ்பேயி பதினான்காவது தலைமை அமைச்சராக மார்ச் மாதம் 19, 1998-ஆம் நாளன்று பதவி ஏற்றுக் கொண்டு நமது நாட்டை ஆட்சி செய்தார்.

வழக்கம்போல ஐந்தாண்டுக்கு ஒரு முறை வருகின்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 2000-ஆம் ஆண்டில் வந்தது. பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி தோற்றது. திருமதி. இந்திரா காந்தியின் - மருமகளும், ராஜீவ் காந்தியின் இல்லத்தரசியுமான சோனியா காந்தியின் தலைமையில் இயங்கும் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக் கூட்டணியான முற்போக்கு | ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றது.

அடல் பிகாரி வாஜ்பேயின் கூட்டணி தோல்வி பெற்றதால், திருமதி. சோனியா காந்தியின் | தலைமையிலுள்ள தேசியக் காங்கிரஸ் கட்சிக் கூட்டணி : இந்திய அமைச்சரவையை உருவாக்கியது. டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் பதினைந்தாவது தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். இன்று 2005-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாளாகும்.