பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 21

பித்தம், சோர்வு எனும் உடலின் நான்கு முக்கிய நீர்மப் பொருள்களால் உண்டாகும் நோய்கள்: Comedy of Humours அதாவது, தனிப்பட்ட குண இயல்புகளை உறுப்பாகக் கொண்ட நாடகச் சுவை; Good Humour எனப்படும் மகிழ்வோடிருக்கும் மனநிலை; il humour மகிழ்வற்ற மனோ நிலை, out of Humour மனநிலை மாறியக் கோபத்தைக் கிளறும் சூழ்நிலைகளை உருவாக்கும் மனோ வகைகளை, நகைச்சுவை உண்டாக்கும் சக்தி பெற்றது எனலாம்.

எனவே, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள், தான் நடித்துள்ள 'ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் - சிரிப்புக்களுக்கே இலக்கணம் வகுத்தும், சிரித்தும், நடித்தும் வாழ்க்கை நிலைகளைச் சுட்டிக் காட்டியுமுள்ளார்.

அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்றுள்ள மாணவர்களுக்கு அமையுமானால், ஒருமுறை அக் காட்சியைப் பார்த்து அந்தந்தத் தத்துவங்களைப் புரிந்து கொள்வார்கள்.

மனிதன்தான் சிரிக்கத் தெரிந்தவன். மற்ற எந்த உயிரும் சிரிக்காது; சிரிக்கத் தெரியாது. சிரிக்கும் அந்தக் குணத்தை ஆறறிவு உயிர்களுக்கு மட்டுமே இயற்கை படைத்துள்ளது.

நகைத் திறமிக்கப் பேச்சாளராக, நகைச்சுவை எழுத்தாளராக, நகைச்சுவை நடிகராக, தனித்திறப் போக்கை தனது செயல்களில் இயற்கையாகப் புகுத்திடும் மக்கள் போக்கு - அனுபவங்களைத் தினந்தோறும் காண்பவராக நாம் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திருக்குறளார் முனிசாமி என்ற ஒரு வழக்கறிஞர் வாழ்ந்தார். அவர் நீதிமன்றப் படிக்கட்டுக்களை வயிற்றுப் பிழைப்புக்காகக் கூட ஏறியதே இல்லை. தினந்தோறும் தமிழ்நாட்டு மேடைகளில் இதமாக வீசும் பூமன இளந்தென்றலைப்போல, நகைச்சுவையோடு பேசிப்பேசி மக்களுக்கு அறிவூட்டும் நகைச்சுவை நாயகமாக, நாவலராக நடமாடியவர்.

நகைச்சுவைக்கு அரசியலிலும், இலக்கியத்திலும், கவிதை - காவியங்களிலும் இலக்கணியாக இருந்தவர் திருக்குறளார். அவர் திருச்சிக் கல்லூரியில் மாணவராக இருந்தபோது பேசிய நகைச்சுவைச் சொற்பொழிவைக் கேட்ட ரயில்வே எஞ்சின் டிரைவர் ஒருவர், தனது மகளையே அவருக்குத் திருமணம் செய்துக் கொடுத்தார் என்றால், குறளார் பேச்சு எப்படிப்பட்ட நகைச் சுவைப் போதையூட்டியதாக அமைந்திருக்க வேண்டும்.

நகைச்சுவைக் கலைஞர் பேசும் ஒவ்வொரு கருத்தும், மாணவர்களை, மக்களைச் சிந்திக்க வைக்கும் ஆற்றலின் தாய்ப்