பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 23

மறுபடியும் அதே எவாஞ்சலிஸ்டுகள் கூட்டத்திற்குக் கலந்து கொள்ள வந்தவர்களைப் பார்த்து, உங்களிலே யார் யார் நரகத்திற்குப் போக விருப்பம் இல்லையோ, அவர்கள் எழுந்து நில்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். எல்லோரும் அவரவர் இடங்களிலே எழுந்து நின்றார்கள் - லிங்கன் ஒருவரைத் தவிர அவர் அமர்ந்தபடியே இருந்தார். கார்ட் ரைட், லிங்கனைப் பார்த்து, "Sorryi" "வருந்துகிறேன் என்றார்.

'இந்த லிங்கன், மோட்சத்திற்கும் போக விரும்பவில்லை. சொற்புரட்டுக்காகக் கூறும் நரகத்திற்கும் போக விரும்பவில்லை” என்றார்.

"அப்படியானால், நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள் என்று "கூறமுடியுமா?” என்று லிங்கனைக் கேட்டபோது, அவர் மெதுவாக, தணிந்த தொணியில், "நான் கூட்டம் நடத்தும் காங்கிரசுக்குப் போகிறேன்” என்று யூகமாக கூறிய பதிலைக் கேட்ட எவாஞ்சலிஸ்டுகள், தங்கள் தலைகளை நிமிராமலேயே அமர்ந்திருந்தார்கள்.

ஆர்.கே. சண்முகம் செட்டியார் இந்திய முதல் நிதி மந்திரி

கோவை பஞ்சாலை உரிமையாளர். பொருளாதார மேதை. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி மந்திரி ஆர்.கே. சண்முகம் செட்டியார். அவரைச் சுருக்கமாக ஆர்.கே.எஸ். என்றே அழைப்பதுண்டு.

சர். ஆர்.கே.எஸ் நாடாளுமன்றத்தில் பேசும் பேச்சுக்கள் எல்லாமே, மற்றவர்களை விட வேறுபடுத்திக் காட்டுகின்ற, தனிச் சிறப்புடையதாகச் சிறக்கும். அவ்வளவு கடுமையாக, வேகமாக, தர்க்கரீதியாக அசைக்க முடியாத புள்ளி விவர ஆதாரங்களோடு அவர் நா நயம் காட்சி தரும். ஆனால், அவரது உரைகளில் திடீர் எழுச்சிகள், நகைச்சுவைத் திறமையு டன் கூடிய துணுக்குகள், கேலிக் குறிப்புரைகள், எதிரியைச் சாடும் சாடல்கள் அனைத்தும் அவரது வாத உரைகளில் கடைசி வரை வெடித்துக் கொண்டே இருக்கும்.

ஒருமுறை ஆர்.கே.எஸ். நாடாளுமன்றத்திற்கு அவைத் தலைவர் வந்ததற்குப் பிறகு அவைக்குள் வந்தார். வரும்போது ஆர்.கே.எஸ். வழக்கமாக அணிந்து வரும் தலைக்குரிய பொய் மயிர் தோகையை (டோபாவை) அணியாமல் வந்து விட்டார்.

இதைக் கண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.கே.எஸ். விக்' (Wig) அணியாமல் வந்துவிட்டதை ஒரு கேள்வியாக எழுப்பி நினைவுப்