பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

உணராமல் நடக்க வேண்டும் என்ற சிந்தனையில்தான் மேற்கண்டவாறு தனது பேச்சு அமைப்பின்மீது அவர் கவனமாக இருப்பார்.

மோசஸ் பாதிரியாருக்குப் பேசத்தான் தெரியும் பாதிரியார் அல்லவா? அதனால் வேறு எந்த ஒரு கலையும் அவருக்குத் தெரியாது.

ஆனால், கடவுள் அவருக்கு ஓர் அற்புத சக்தியை வழங்கியதால்தான், அவருடைய கிறித்துவச் சமையப் பரப்புக் களத்திலே, அற்புதமானத் தனது நாவன்மையை நாட்டி வெற்றிப் பெற்ற சமையவாதியாகப் புகழ் பெற்றார்:

அவர் பேசுவதற்காகத் தனக்கென அமைத்துக் கொண்ட ஒரு பாணியைக் கவனமாகக் கடைப்பிடித்து மற்றவர்களிடமும் நடந்ததால், அவர் ஒரு திக்குவாயர் என்ற அடையாளமே காண முடியாத நாவலர் ஆனார்! மாணவர்களே - நீங்கள்

ஜோசப் அட்கின்சன்

வட அமெரிக்க நாட்டிலே உள்ள கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஜோசப் அட்கின்சன் அவர் இளம் பருவம் முதல் திக்குவாயராகவே வளர்ந்தவர்.

'டைம் பத்திரிகை நிறுவனர்

ஹென்றி லூசி என்பவர், உலகப் புகழ் பெற்ற "டைம் என்ற பத்திரிகையை நிறுவியவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தெத்து வாயராகவே இருந்தார். ஆனால், பத்திரிகைத் தொழிலில் அவர் மிகச் சிறந்தவராக விளங்கினார்.

கிரேக்க மேதை டெமோஸ்தனிஸ்

கிரேக்க தத்துவமேதை டெமோஸ்தெனிஸ் சிறுவனாக இருக்கும்போதே, திக்குவாயராக இருந்தார். சொற்கள் உச்சரிப்பும், வாக்கிய அமைப்பும் தெத்தித் தெத்தித்தான் அவருக்குப் பேச வரும்.

தனக்கு வந்துள்ள திக்குவாயை எப்படிச் சரி செய்வது என்று அவர் சில மருத்துவரிடம் கேட்டார். அவர்கள் கூறியபடி மிகச் சிறுசிறு வழவழப்பான கூழாங்கற்களைத் தனது நாக்குப் பள்ளத்துக்கு அடியில் தேக்கி, உருட்டி உருட்டிப் பேச ஆரம்பித்தார். சொற்கள் சிறுது சிறிதாகத் தட்டுத் தடங்கல் இல்லாமல் பேசும் நிலை வந்தது.

- அதைக் கண்டு அவருக்கு நம்பிக்கை வந்தது - தன்னால் நன்றாகப் பேச முடியுமென்று. சாலை ஓரங்களில் அடிக்கடி வரிசையாக நின்று கொண்டிருக்கும் மரங்களைப் பார்த்து, கால் கைகளை