பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

முதன் முதல் கண்டுபிடித்த அறிவியல் ஞானி. இவர் மெத்தடிஸ்ட் - மினிஸ்ட்ரி என்ற பள்ளியில் கல்வி கற்றார்! ஆனால், அவர் நிறுத்தி நிறுத்திப் பேசும் பண்புடையவர். அதனால், அவர் மருந்தியல் துறையில் பணியாற்றினார்.

டாக்டர் ஃப்ரெட்ரிக் பாண்டிங் சிறந்த விஞ்ஞானியாக விளங்கியதால், அவர் இன்சுலின் ஊசி மருந்து கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற திக்குவாயர் ஆவார்.

ஆர்னால்டு பென்னட் என்பவர் ஓர் ஆங்கில எழுத்தாளர். பல நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர். அதனால், அவர் எத்தகைய எழுத்தாற்றல் உடையவர் என்பதை ஆங்கில வாசகர்கள் உலகமே நன்கு அறியும்.

இத்தகைய ஆற்றல் பெற்ற ஆர்னால்டு மிக மோசமான திக்குவாயராக விளங்கினார். மோசமான திக்குவாயர் என்றால் பண்பிலல்ல; பேசும் முகவிகாரத் தோற்றத் தெத்தல்களிலே அவர் மற்றவர்கள் பார்வைக்கு மிக மோசமாகக் காட்சித் தந்தார்.

ஆர்னால்டு ஓர் எழுத்தாளராக வேண்டு மென்று விரும்பியவரல்லர். அவர் எந்தவித ஆங்கில இலக்கியங்கள் உதவியும் இல்லாமலேயே பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதியவர். இருந்தும் என்ன பயன்? தனது திக்குவாய்த் தன்மையை நீக்கிக் கொள்வதற்கு அவர் முயற்சிக்காதவர்தானே!

இங்கிலாந்து நாட்டு மன்னர் ஆறாம் ஜார்ஜ், ஆங்கில இலக்கியப் புகழ் வானில் சிறந்த விமரிசனராகவும், எழுத்தாளராகவும் வாழ்ந்து கொண்டிருந்தவர் என்று ஆங்கில இலக்கிய உலகம் அவரைப் பற்றிக் கருத்தறிவித்தது.

சார்லஸ் லேம்ப், ஏசாப், அல்சியாபெடிஸ், வர்ஜில் போன்ற மற்றும் பலர், உலக வரலாற்றில் புகழ்பெற்ற திக்குவாயர்கள் மேதைகளாக விளங்கி, அரிய சாதனைகள் பல ஆற்றியுள்ளார்கள்.

மாணவ, மாணவிகளே உங்களில் திக்கு வாயர்கள் யாராவது இருந்தால் கவலைப் படாதீர்கள்.

புகழ்பெற்ற திக்குவாய் மேதை நோபல் பரிசு பெறவில்லையா?

அதனைப் போல நீங்களும் முயற்சி செய்தால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் என்பது உறுதி; முயல்க!