பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோஹன்னெஸ் கூட்டென்பெர்க், அச்சுக்கலை அற்புதங்கள்!

'ஜோஹேண்னெஸ் கூட்டண்பர்க்

மாணவ மணிகளே!

அச்சுக்கலை படிப்படியாக வளர்ந்துவிட்ட காலம் இது. அதன் அற்புதங்களை இன்று நாம் பல உருவங்களிலே கண்டு போற்று கின்றோம். அந்த அச்சுக்கலை வரலாற்றை மாணவர்களும் தெரிந்து கொள்வது அவசியம். சுருக்கமாக அதைக் கீழே விளக்கியுள்ளோம்.

ஜெர்மன் நாட்டில் மெயின்ஸ் என்ற ஓர் அழகான நகரம் அங்கே சொல்வாக்குள்ள செல்வக் குடும்பம் ஒன்றில் 1397-ஆம் ஆண்டில் ஜோஹன்னெஸ் கூட்டன்பெர்க் (Johann Gutenberg) பிறந்தார். அவரும், அவருடைய மூத்த உடன்பிறப்புகள் இருவரும் அவர்களுடைய வீடருகே உள்ள பள்ளி ஒன்றில் கல்வி கற்றார்கள்.

இளம் வயதில் ஜோஹன்னெஸ் கூட்டன்பெர்க் கல்வியில் போதிய சிறப்பு அக்கறை செலுத்தவில்லை. ஆனால், தொழில்நுட்பத் துறையில் ஏதாவது ஒரு பணியாற்றிட விரும்பினார். அதற்குக் காரணம் அவருடன் பழகிய நண்பர்களில் பொற்கொல்லர்கள், கண்ணாடிகளுக்குப் பாலிஷ் போடுபவர்கள், ரப்பர் ஸ்டாம்பு சீல் செய்பவர்கள், கைத்தொழிற் கலை சார்ந்த நெசவாளிகள், வைரம் அறுக்கும் தொழிலாளர்கள், கலை நுட்ப அலங்காரங்கள் செய்பவர்கள் போன்றவர்கள் எல்லாம் அவருக்கு நண்பர்களாக இருந்ததால், கூட்டன்பெர்க்கும் அவர்கள் உதவியால் ஒரு தொழிலை ஆரம்பித்தார். ஆனால், அந்தத் தொழிலில் பெரும் நட்டம் ஏற்பட்டதால் அதை அவர் நிறுத்தி விட்டார்.

அந்த நேரத்தில் ஜெர்மன் நாட்டின் அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. கூட்டன்பெர்க் தான் பிறந்த ஊரை விட்டுப் பலவந்தமாக வெளியேறும் நெருக்கடி நிலை உண்டாயிற்று. 1428-ஆம் ஆண்டில் அவர் செர்மனியை விட்டு வெளியேறி ஸ்ட்ராபெர்க் என்ற நகரை அடைந்தார்.