பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ö மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் பரம்பொருள்; எங்கும் நிறைந்தவர்; அறிவு வடிவானவர்; அன்புள்ளம் கொண்டவர்; அவரைப் போலவே சூரியனும் நடுநிலையானது ஒலி, ஒளி வடிவானது. அது, நாம் தீர்மானிக்க முடியாத பெரிய சர்ச்சை',

'தினந்தோறும் கடவுளை அடைய நீ முயற்சித்தால், ១លនា நெருங்கலாம் அவர் அருளின் எதிரொலியை உன்னுடைய ஆன் மாவிலே உணரலாம்!” என்றார் ஃப்ராங்லின்.

குழந்தை சிரித்துக் கொண்டே ஓடிவிட்டது. மாணவ மணிகளே! நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்! விஞ்ஞான மேதையல்லவா கூறுகிறார்!

இதே கேள்வியைத்தான் இரண்யன் என்ற அசுரனிடம், அவனது மகன் பிரகலாதன் கேட்டானாம்! அதற்கு அந்தக் குழந்தை மகன் கூறும் பதிலைக் கம்பர் கூறும்போது, "தூணிலும், சாணிலும், அணுவைச் சத கூறுகளிட்டக் கோனிலும் உளன் என்று பிரகலாதன் கூற்றாகக் கூறினார்.

அணுவை நூறாக வெட்டிய அந்தத் துகள்களைக் கோண் என்றும், அதிலும் கடவுள் இருக்கிறான் என்றும் கம்பர் பிரகலாதன் கூறுவதாகக் குறிப்பிட்டார்.

அணு என்ற ஒன்றுண்டா என்று மேல்நாட்டு அறிவியல் வித்தகர்கள் உணராத காலத்திலேயே, தமிழ்நாடு உணர்ந்திருந்தது. அதுவும் எப்போது தெரியுமா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே. திருவள்ளுவர் பெருமான் திருக்குறளுக்குப் பாமாலை சூட்டிப் போற்றிய ஒளவை பெருமாட்டி, 'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி, குறுகத்தரித்தக் குறள்' என்றார். அந்த அணுவைத் தான் 15, 17,18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விஞ்ஞானிகள் பிளந்து காட்டினார்கள். ஆனால், கம்பர் பெருமானைப்போல அணுவை வெட்டிய 100வது துகளுக்குப் பெயரென்ன? 'கோண் என்று கூறும் சிந்தனை எழுவில்லை. எனவே, அணு, கோண் மட்டுமல்ல, எங்கெங்கும் கடவுள் கடந்துள்ளார். அதைத்தான் பெஞ்சமின் குழந்தைக்குத் தனது சிந்தனைக் கேற்பக் கூறியுள்ளார்.

ஆனால், பெஞ்சமின் ஃபிராங்லினிடம் குழந்தைக் கேட்ட கேள்விக்குக் கூறிய பதிலையும் மேலே படித்தீர்கள் அல்லவா மாணவர்களே!

எப்பொருளை யார் யார் வாய் கேட்பினும், அப்பொருளில் மெய்ப் பொருள் எது என்பதை நீங்களே சிந்திக்க வேண்டுகிறேன். அப்போதுதான் புரியும் அறிவின் உண்மை! 驚