பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் உலகத்தில் இராஜதந்திரி என்று புகழ் பெற்ற, சூரியன் மறையாத சாம்ராச்சியத்திற்கே பிரதமராக விளங்கிய அரசியல் யூகி வின்ஸ்டன் சர்ச்சில்.

மோட்டார் மன்னன் என்று புகழ் பெற்றவர் அமெரிக்கக் கோடீஸ்வரன் ஹென்றிஃபோர்டு.

இந்திய நாட்டின் விடுதலைக்குத் தந்தையென உலகத்தால் போற்றப்படுபவர் - அறப்போர் மாமன்னர் மகாத்மா காந்தியடிகள்.

ஆன்மிகளுானி இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் அனைவரும், அவரவர் மரியாதைகளை, பெருந்தன்மைகளை, தங்களது இல்லத் துணைவியர்களுக்கே காணிக்கையாக்கி இருக்கிறார்கள்.

ஆணும் - பெண்ணும் முன் காலத்தில் ஈடன் தோட்டத்திலே சேர்ந்து வாழ்ந்தபோது, மரத்திலுள்ள அறிவுக் கனியை முதன் முதலாகப் பறித்து உண்டவள் பெண் அந்தக் கனியின் ஒரு பகுதியைக் கணவனுக்கும் கொடுத்தவள் பெண்.

அந்த நேரம் முதலே ஆணைப் பின்னிருந்து இயக்கும் உந்துசக்தியாக, பெண் விளங்கினாள். அதனால், பெண்ணைத் தனது வாழ்க்கையின் வழிகாட்டியாக அன்றுமுதல் ஆண் ஏற்று வாழ்வைத் தொடர்ந்தான்!

அதுமட்டுமன்று, பெண் கருவில் ஆண் இருந்தபோது, அவனது உடலின் விலா எலும்பை உருவாக்கியவளே பெண்தான் என்று கூறுகிறார்கள். அவள் அந்த உடற்கூறை உருவாக்கி வெளியே குழந்தையாக அனுப்பி வைத்தவள்.

அந்த உடற்கூறு ஆண்மகனுடைய இதயம் என்ற பகுதிக்கு அருகே வீழ்ந்தது. ஆண் மகன் மிகச் சுலபமாக ஏன் பெண்ணிடம் தனது இதயத்தை இழந்தான் என்பதற்கு இதுதான் காரணம்.

பெண் எப்போதுமே, எதையுமே, தீர்மானிக்கும் நீதிபதி போன்றவள் அமெரிக்காவில் மட்டும் 70,000 பெண் வழக்குரைஞர்கள் பணிபுரிகிறார்களாம்.

அமெரிக்காவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் பெஞ்ச் கிளார்க், அரசு வழக்குரைஞர் எதிர்தரப்பு வழக்குரைஞர், நீதிபதி எல்லாருமே பெண்களாகவே பணி புரிகிறார்கள். அவர்களிலே குற்றவாளி ஒருவன் மட்டும்தான் ஆண்!

- பெண் எளிதில் உடைகின்ற, உருகுகின்ற மனம் உடையவள். என்றாலும், அவள்தான் கருணை, இரக்கம், அன்பு போன்ற பண்புகளை