பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 47

கி.பி.

கி.பி.

கி.பி.

கி.பி.

கி.பி.

கி.பி.

கி.பி.

1947

1948

1950

1952

1954

1967

1984

இந்தியாவை இரண்டாக உடைத்து ஒன்று இந்துஸ்தான் எனவும், மற்றொன்று, பாகிஸ்தான் எனவும் சுதந்திர உரிமை வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் பதவிப் பொறுப்பை பண்டித ஜவகர்லால் நேரு ஏற்றார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக சக்கரவர்த்தி இராசகோபாலாசாரி பதவி ஏற்றார். ஆங்கிலேயர் பேரரசின் கடைசி வைசியராயாக இருந்த மவுண்ட்பேட்டன் இந்திய ஆட்சியரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இலண்டன் சென்றார். மகாத்மா காந்தியண்ணலை நாதுராம் விநாயகக் கோட்சே என்ற இன வெறியன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான்.

இந்தியா குடியரசு நாடாக மாறியது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பாபு இராசேந்திர பிரசாத் பதவி ஏற்றார். தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பெருந்தலைவர் காமராசர் பதவி ஏற்றார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக அறிஞர் அண்ணா பதவி ஏற்றார். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்டு படுகொலையானார். இந்தியாவின் பிரதம மந்திரியாக ராஜீவ் காந்தி பதவி ஏற்றார்.