பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 49

டாவின்சி ஓவியம் எழுதுவதற்குரிய ஒரு முரட்டுத் துணியையும் தனது கையில் கொண்டு வந்தார். அன்றைக்கு அவர் இயேசு பெருமானது திருமுகத்தை ஒவியமாக எழுதுவது என்ற முடிவோடு மகிழ்ச்சிப் பொங்க வந்தார். ஆனால், எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தும் கூட, அவரால் அதை எழுத முடியவில்லை.

ஏனோ அவர் - அன்று, என்றுமிலாத கோபமும், எரிச்சலும் கொண்டு துரிகையை ஏந்தினாரோ தெரியவில்லை. கடைசிவரையில் இயேசு நாதர் முகத்தை அவரால் எழுதவே முடியவில்லை.

வண்ணக் கலவைகள், துரிகைகள் மற்றுமுள்ள கருவிகள் அனைத்தையும் அப்படியே கீழே போட்டுவிட்டு, எந்த மனிதன் மீது அடங்கா சினத்தால் கோபித்துக் கொண்டாரோ, அவனது அமைதியான, அடக்கம் தவழ்ந்த முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். குழந்தை இயேசு போல அமைதியோடிருந்த அந்தப் பணியாளனிடம் தன்னை மன்னிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொண்டார் டாவின்சி,

பாதிக்கப்பட்ட மனிதனும் - டாவின்சியின் பாவமன்னிப்பை ஏற்றுக் கொண்டார். டாவின்சி மீண்டும் தனது இயேசு பெருமானது திருமுகத்தை எழுதும் பணியினைத் துவக்கி அழகாக முடித்தார்.

இயேசு பெருமான் தனக்களித்த Last Supper விருந்தில், அவர் கலந்து கொண்ட காட்சியை டாவின்சி ஓவியமாக அன்று எழுதியதால், அது உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஒவிய உருவத்தைவிட - புகழ் பெற்றதாக இன்றும் காட்சி தருகின்றது - ரோம் நகரில்.

லியோனார்டோ-டா-வின்சி, தனது அடங்கா சினத்தை அடக்கிக் கொண்டு, மற்றவர். மேல் கோபப்படுவது தவறு என்பதை உடனே உணர்ந்து கொண்டு, பாதிக்கப்பட்ட ஏழையிடம் பாவ மன்னிப்பைப் பெற்று, மனநிறைவோடு இயேசு பெருமான் ஓவியத்தை அமைதியாக எழுதியதால்தான், ரோம் நகரில் அந்த ஓவியம் இன்றும் அவர் புகழைப் போற்றிக் கொண்டிருக்கிறது. கோபத்தோடே இயேசு பிரான் முகத்தை எவன் எழுதுவான்? எழுதினாலும் டாவின்சியின் அந்த ஓவியக் கலை இன்றும் உயிரோடு காட்சி தருமா? எனவே, ஆறுவது சினம் மாணவர்களே!