பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் போஸ் நிரூபித்தார். இதைக் கண்ட உலக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்; அவரைப் பாராட்டினர்.

'பிராணிகளைப் போலவே, தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு. அவை உற்சாகப்படும்போது தழைக்கின்றன; துன்பமடையும்போது வாடுகின்றன.

மனிதன் அதை வெட்டும்போதும் அறுக்கும்போதும் வலிதாங்க முடியாமல் வேதனைப்படுகின்றன போன்ற விஞ்ஞான உண்மைகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார் ஜகதீச சந்திர போஸ்.

தாவரங்களின் உணர்ச்சிகளை நேரிடையாகப் பார்த்து மகிழக் கூடியக் கருவிகளை ஜகதீசர் கண்டுபிடித்தார்.

ஒன்றின் பெயர் ரெசோனெண்ட் ரிகார்டர் மற்றொன்றையும் அவர் கண்டுபிடித்து அதற்கு கிரசகோகிராப் என்று பெயரிட்டார்.

அந்த இரண்டு கருவிகளால் தாவரங்களின் வளர்ச்சிகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை எல்லாம் பார்க்கலாம்.

இவை இரண்டு கருவிகளும் ஜகதீசருக்கு முன்பு உலகத்தில் எந்த விஞ்ஞானியாலும் அன்று வரைக் கண்டுபிடிக்கப்படாதவை ஆகும்.

அறிவியல் மேதை ஜகதீச சந்திரபோஸ் கண்டுபிடித்த புதிய விஞ்ஞானச் சாதனைகளைக் கண்டு, இந்திய-ஆங்கிலேயர் அரசு அவரை இங்கிலாந்துக்கு வரவழைத்துப் பாராட்டியது. -

இந்தியா வருகை தந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஜகதீச சந்திர போசுக்குப் பொன்னாடைப் போர்த்தி, ‘சர்’ பட்டத்தையும், சி.எஸ்.ஐ. என்ற விருதுவையும் அவர் வழங்கினார்.

இத்தகைய அறிவியல் மேதை 1937-ஆம் ஆண்டு நவம்பர் 25-ல் மாரடைப்பால் இறந்தார். - -

இந்திய விஞ்ஞானிகளும், அவரது இலக்கிய வட்டத்து நண்பர்களும், உலக அறிவியல் துறை அறிஞர்களும், குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களும் அவரது மறைவைக் கண்டு

கண்ணிராரங்களை அணிவித்தார்கள்.