பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுசக்தியை உடைத்த விஞ்ஞானி ருத்தர் ஃபோர்டு!

மாணவ மணிகளே!

ர்ேனஸ்ட் ரூத்தர் ஃபோர்டு, நியூசிலாந்து என்ற நாட்டில் 1871-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார்.

இவரது தந்தை நெல்சன் என்ற நகர் அருகே சணல் வகைச் செடிகளைப் பயிரிடுவதும், மரத்தை அறுத்துப் பலகைகளைச் செய்யும் தொழிற்சாலையும் நடத்திக் கொண்டிருந்தார்.

ரூத்தர் ஃபோர்டு தனது பள்ளிப் படிப்பில் மிகவும் அறிவு நுடபம் உடையவராக இருந்தார்.

நியூசிலாந்தில் உள்ள கேண்டர்பரிக் என்ற கல்லூரியில் தனது கல்விப் பட்டப் படிப்பை முடித்தார்.

அந்தக் கல்லூரி நிர்வாகத்தினர் வழங்கிய உதவிச் சம்பளத்தைப் அவர் பெற்றார், இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கதிரியக்கம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிக் கல்வியை ரூத்தர் படித்தார்.

இதே கதிரியக்கம் பற்றிய ஆராய்ச்சிக் கல்வியைத் தொடர்ந்து பெற்றிடக் கனடா நாட்டில் மாண்ட்ரியல் நகரிலுள்ள மெக்ஜில் பல்கலைக் கழகத்தில் அவர் சேர்ந்து படித்தார்.

தான் கல்விகற்ற மேண்ட்ரியல் பல்கலைக் கழகத்திலேயே தனது 27-வது வயதில் இயற்பியல் துறையில் அவர் பேராசிரியரானதும் மேரி நியூட்டன் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார்.

அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்துக் கொண்டிருக்கும்போதே, கதிரியக்கம் ஆராய்ச்சி, ரேடியம், யூரேனியம் ஆராய்ச்சி ஆகியவற்றின் சோதனைகளை அவர் செய்து வந்தார்.