பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 55

அந்த ஆராய்ச்சியின் முதல் தடவையாக, அவருடைய அணு சோதனையில் Nuclear Physics என்ற ஆய்வுத் தத்துவத்தின் காற்சுவடு பதிவானது.

ரூதர் ஃபோர்டு கண்டுபிடித்த அணு ஆய்வை விஞ்ஞான உலகம் வரவேற்றுப் பாராட்டியது. அதனால், அவர் 1919-ஆம் ஆண்டில், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியான காவெண்டிஷ் என்பவர் பெயரால் நிறுவப்பட்ட லண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், அவரது விஞ்ஞான ஆசானாக இருந்த ஜே.ஜே தாம்சனுக்குப் பிறகு ஃபோர்டு இயக்குநர் பதவியை ஏற்றார்.

அந்தப் பல்கலைக் கழகத்தில் ரூதர் ஃபோர்டுக்கு முன்பு பணியாற்றிய அணு ஆய்வு விஞ்ஞானிகளை எல்லாம் மீறிய ஆராய்ச்சி வல்லுநராக ரூதர் திகழ்ந்தார்.

இதே துறையில் பல்லாண்டுகள் பணி புரிந்ததோடு, அவர் செய்த விஞ்ஞான ஆராய்ச்சிகளிலே பல சாதனைகளையும் உருவாக்கி, அந்தப் பல்கலைக் கழகத்தில் பெரும் புகழோடு ரூதர் திகழ்ந்தார்.

இறுதியாக, 19.10.1937-ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரூதர் ஃபோர்டு காலம் ஆனார். ரூதர் ஃபோர்டு ஏழையாகப் பிறந்தார்; ஏழையாகவே இறந்தார். ஆனால், அவர் எழுதிய மரண உயிலில் அவர் பெற்ற நோபல் பிரிசு பணம் 7000 டாலர் மட்டும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 靈