பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபிறப்பு உண்டா? நம்பும் அறிஞர்கள் யார்?

(-பித்தகோஸ்

மாணவப் பருவங்களே!

'மறுபிறப்பு என்ற ஒன்று உண்டா? இல்லையா? என்ற சிக்கல் நீண்ட நெடுங் காலமாக - மத, ஆன்மீக உலகில் இருந்து வருகிறது.

உலகப் பொதுமறையை எழுதிய திருவள்ளுவர் பெருமான், "எழுபிறப்பும் தீயவை தீண்டா” என்ற குறட்பாவை எழுதியதற்கு பரிமேலழகர் கண்ட உரையில், ஏழ் பிறப்பு என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், சில பகுத்தறிவுணர்வு உள்ளவர்கள் ஏழு பிறப்பு என்று கொள்ள மறுத்து, எழுகின்ற பிறப்புக்களில் எல்லாம் என்று கூறுகின்றார்கள்.

எது எப்படியோ, நீங்கள் கல்வி கற்கும் பருவத்தில் இருப்பவர்கள். உங்களுடைய கருத்துக்கு குறுக்கே தலையிடுவதுஅறமாகாது. எனவே, "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதுதானே அறிவு” என்றார் திருவள்ளுவர் பெருமான். எனவே, அறிவைத் தேடுங்கள்........!

தமிழ்நாட்டுச் சித்தர்களில் பலர் மறுபிறப்பை நம்பியே யோகிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களுள் ஒரே ஒருவர் மட்டும்தான் கார சாரமாக மறுபிறப்பை நம்புகிறவர்களைக் கண்டித்திருக்கிறார். அவர் பெயர் சிவவாக்கியர். அது இது:

'கறந்தபால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர்புகா! விரிந்த பூவும் முதிர்ந்த காயும் மீண்டும்போய் மரம்புகா உடைந்த சங்கின் ஒசையும் உயிர்களும் உடற்புகா! இறந்தவர் பிறப்பதில்லை; இல்லை; இல்லை; இல்லையே!” -- என்று, மறுபிறப்பை அவர் ஒன்றுக்கு நான்கு முறை மறுத்துக் கண்டித்துள்ளார். எனவே, மறுபிறப்பைப் பற்றி உலகம் என்னென்னவோ