பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானி ஐன்ஸ்டின் கொடுத்த கால் டாலர்:

ாணவர்களே!

அமெரிக்க நியூயார்க் பல்கலைக் கழகத்தில் ஒரு நாள், அறிவியல் மேதை ஐன்ஸ்டினைப் பளபளவென்று பளிச்சிட்டுக் கொண்டு, தகதகவென ஒளிக்கும் ஷ9 அணிந்து கொண்டிருந்த மாணவன் ஒருவன் சந்தித்தான்!

அப்போது ஐன்ஸ்டின் அந்த மாணவனைப் பார்த்து, 'தகத்தக பளப்பளப்புடன் ஷ9 அணிந்து கொண்டிருக்கும் அறிஞரே! என்று அன்பு தவழ அழைத்தார்.

அந்த மாணவனுக்கு உடனே தலைகாலே புரியவில்லை. அவன் தனது தலையை தளதளவென ஆட்டிக் கொண்டு, ஐன்ஸ்டினைப் பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தான்.

உடனே ஐன்ஸ்டின் அந்தப் பளப்பளப்பு ஒளிவீசும் ஷ9காரரைப் பார்த்து, 'தம்பி!!, நீ முகத்தைக் கழுவிக் கொண்டு வா! உனக்கு அமெரிக்கப் பணம் கால் டாலர் தருகிறேன்! என்றார்.

மாணவன் ஓடினான் குழாய் தண்ணில் முகம் நன்றாக கழுவிக் கொண்டு திரும்பி வந்து விஞ்ஞானி முன்பு நின்றான்.

மிகவும் நல்லது என்று தலைவிரி கோலமாய், தாடியும் மீசையுமாய் காட்சித் தந்துக் கொண்டிருந்த அந்த விஞ்ஞானி; தான் கூறியபடி, கால் - அமெரிக்க டாலர் பணத்தை அந்த மாணவனிடம் கொடுத்து விட்டார். சிறிது நேரம் கழித்த அந்த அறிவியல் மேதை, மாணவனிடம், "நான் கொடுத்தப் பணத்தை நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவன் ஐன்ஸ்டினைப் பார்த்து, 'அந்தப் பணத்தை நான் உம்மிடமே திருப்பித் தந்து விடுவேன் - நீர் உமது தலைமுடியை வெட்டிக் கொள்வதாகச் சத்தியம் செய்து கொடுத்தால்: என்றான். விஞ்ஞானி ஐன்ஸ்டின் மீண்டும் தனது புன்சிரிப்பையே பொன் பரிசாக அவருக்கு வழங்கினார். --->