பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜியார்ஜ் ஈஸ்ட்மேன் : கோடக் கேமெரா !

மாணவ, மாணவியர் செல்வங்களே!

உலகப் புகழ் பெற்ற கோடக் கேமெரா எனப்படும் நிழற்படக் கருவியை, முதன் முதல் கண்டுபிடித்து இந்த மேதினிக்கு வழங்கியவர் ஜியார்ஜ் ஈஸ்ட்மென் என்பவராவார். இவர் 1854-ஆம் ஆண்டு முதல் 1932-ஆம் ஆண்டு வரை புகழோடு வாழ்ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புச் சாதன்ையாளர்.

அவர் பெயரால் வெளிவந்த ஈஸ்ட்மேன் காமெரா பலவிதமான உருவங்களில், தோற்றங்களில், போட்டோ பிடிக்கும் கலைத்திறன் நுட்பங்களில், மக்களிடையே பயன்பட்டுச் செல்வாக்குப் பெற்றது.

அப்போது, யாரோ ஒர் ஊர் பேர் தெரியாத ஒரு வங்கி ஊழியர், அமெரிக்க, நியூயார்க் நகரின் ரோசெஸ்டரில் இருந்தார். அவர்தான் முதன் முதல் ஈஸ்ட்மேன் பெயரால் படச்சுருளைக் கண்டுபிடித்து 1884-ஆம் ஆண்டில் வணிகம் செய்தவர்.

அந்தப் புகைப்படக் கருவியை, ஈஸ்ட்மேன் என்பவர் 1888-ஆம் ஆண்டில் கண்டுபிடித்து, பொழுது போக்குக்காக, பலவித நிழற் படங்களைப் புதிது புதிதாகப் படம் எடுக்கும் மகிழ்ச்சிக்குரிய கருவியாக அதைப் பயன்படுத்தினார்.

மக்கள் எல்லாரும் அதை வாங்கினர். படம் எடுக்கும் எல்லா வகை வசதிகளுக்கும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் தகுதியை, அந்தக் காமெராவை வாங்கிய ஒவ்வொருவரிடமும் அது பெற்றுக் கொண்டது.

அவரது நிழற் படம் எடுக்கும் தனது கருவிக்கு கோடக் என்ற பெயரை வைத்துக் கொண்டதோடு, அதை வாங்குபவர் அந்தப் பெயரையே எந்த மொழியிலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கும் ஈஸ்ட்மேன் எழுத்து மூலம் அதற்கு வழி வகை செய்தார்.