பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 63

இவைகட்குப் பிறகு, ஆந்திர, கேரள, கன்னட, சாலிவாகன போன்ற ஆண்டுக் கணக்குகளை எல்லாம் அந்தந்த இனம் வகுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், இங்கிலீஷ் ஆண்டுக் கணக்கில் வரும் ஒவ்வொரு திங்கள் தோற்றத்திற்கும் என்ன காரணம் என்பதை மாணவர், மாணவியர்கள் தெரிந்து கொள்வது நல்லதல்லவா?

£gonsuf (January)

பழங்கால ரோமானியர்கள், தங்களது கடவுள் ஜானுஸ் (Janus) என்பவரின் நினைவாக அந்த மாதத்தை இங்கிலீஷ் ஆண்டின் முதல் மாதமாக வைத்துக் கொண்டார்கள்.

ஜானூஸ் என்ற கடவுளுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒரு முகம் சென்ற ஆண்டின் முகத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த முகம் வரப்போகும் புத்தாண்டு முகத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றது என்பதே அந்த இருமுகங்கள் ஆகும்.

  • I'lússuf (February)

ரோமர்கள் பண்டையக் காலத்தில் கொண்டாடிய விழா ஒன்றுக்கு ஃபெப்ருவா (Februa) என்று பெயரிட்டார்கள். அந்த விழாவிலே பாவிகள் திரளாகத் திரள்வார்கள். அவர்களுக்கு அவ்விழாவில் மன்னிப்பு கிடைக்கும். அதனால், இரண்டாவது இங்லீஷ் மாதத்திற்கு அந்த விழாவின் பெயரை ரோமர்கள் வைத்துக் கொண்டாடினார்கள்.

lomité (March)

ரோமன் காலண்டரில் முதல் மாதமே இந்த மார்ச் மாதம்தான். அப்போது ரோமர்களுக்கு ஆண்டுக்கு 12 திங்கள் கிடையாது. பத்தே மாதங்கள்தான் பழக்கத்தில் இருந்தன. போர்க் கடவுளுக்கு ரோமர்கள் மார்ஸ் (Mars) என்று பெயர் சூட்டிக் கொண்டாடினார்கள். அந்த மார்ஸ்தான் பிறகு மார்ச் மாதமெனக் குறிப்பிடப்பட்டது.

siliseo (April)

கிரேக்க நாட்டுப் பெண் தெய்வத்தின் பெயர் அப்ஹ்ரோடிட்டி (Aphrodite) என்பதாகும். இந்தத் தெய்வம் கிரேக்க மக்களுக்குக் காதல் கிளர்ச்சியைக் கிளர்த்தும் பெண் தேவதையாம்! அதாவது, புராணிகர்கள் கூறும் நமது நாட்டுத் தெய்வங்களென மதிக்கப்படும் மன்மதன் - ரதி தெய்வம் போன்றவை. ரோமர்களின் அந்தக் காதல் களியாட்ட