பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

விளையாடல்களுக்கு ஏப்ரிரி (Aprire) என்று பெயர். ஏப்ரிரி என்றால் கிரேக்க மொழியில் திறப்பதற்கு என்று பொருள். அதாவது, ஏபரல மாதத்தில் அந்த நிலம் மேலே திறந்திருக்குமாம் - எதற்காக? உழுவதற்காக! (ần (May)

மாய் அ (Maia) என்பது மே மாதத்தின் பெயர். இந்த மாய்அ ஜூபிடர் எனும் கடவுளுக்கு மனைவியாம். அல்லது மூத்த ரோமர்கள் கூடும் சபையாம். அந்தப் பெயரையே மஜோரெஸ் (Majores) என்கிறது ரோம் நாட்டு வரலாறு.

gg9`sir (June)

ஜூன், ரோமர்கள் புராணக் கதையில் வரும் ஒரு புராணி. அவள் மோட்ச லோகத்துக்குத் தெய்வம். திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்குத் தீமைகள் ஏற்படாமல் அவள் காப்பாற்றுவாளாம். அதனால்தான், பெரும்பகுதி திருமணங்களை ஜூன் மாதத்தில் நடத்துவது வாழ்க்க்ைக்கு மிகவும் சாதகமாக அமையும் என்பது ரோமர்களது நம்பிக்கை. எனவே தான் திருமணம் என்பது மேலுலகத்தில் நிச்சயப்படுத்தும் ஒன்றாகும் என்று உலக மக்கள் இன்றும் நம்புகிறார்கள். ஜூன் என்ற தெய்வீகத் திருமணம் பெயரையே ஜூன் (June) என்ற மாதத்திற்கும் வைத்து அவர்கள் மகிழ்ந்தார்கள். £gēsoso (July)

ரோம சாம்ராச்சியத்தை உருவாக்கிப் புகழ் பெற்ற மாவீரர் ஜூலியஸ் சீசர் கொண்டு வந்த காலண்டர் கணக்கு ஜனவரி முதல் நாளாகும். இதற்கு ஜூலியன் காலண்டர் என்று பெயர். அதனால் அவர் பெயரையே ஜூலை மாதத்திற்கு வைத்து கொண்டார் சீசர். ஆண்டுக்கு 366 நாட்கள் என்றும், நான்காவதாண்டை லீப் ஆண்டு என்று நிர்ணயித்தவரும் ஜூலியஸ் சீசர்தான்.

<!osiou (August)

ரோமச் சக்கரவர்த்திகளுள் ஒருவர் அகஸ்டஸ் சீசர். இவர் ஜூலியஸ் சீசருக்குப் பிறகு மாமன்னர் ஆனவர். அந்த மாதத்தில் 30 நாட்கள் மட்டுமே இருந்தன. ஆனால், அகஸ்டஸ் சீசர் தன் பெயரால் அமையும் ஆகஸ்ட் மாதம் - ஜூலியஸ் சீசரின் பெயராலுள்ள திங்களைவிட சற்று நீண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால், அகஸ்டஸ் சீசரின் அவரது பெயர் பெற்றக் காலண்டர் கணக்கில் ஆகஸ்ட் மாதம் 31 நாட்களைப் பெற்று நீண்டது.