பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி §7

insolvency Petition அதாவது மஞ்சள் நோட்டீஸ் என்பார்களே, அதை நீதி மன்றத்தில் பெற்றுக் கடன் கொடுத்துவர்கள் அனைவருக்கும் அனுப்பி விட்டார்.

சித்தரஞ்சன்தாஸ் வழக்கறிஞராகி ஏராளமாகப் பணம் சம்பாதித்தார். அவர் தனது தந்தையார் மறைந்த பிறகும், கடன் கொடுத்தவர்களை எல்லாம் மறக்காமல் வீட்டுக்கு அழைத்து, அவரவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அப்பா பட்டக் கடனை மகன் தீர்த்தார்.

கடன் கொடுத்தவர்களிலே ஒருவர், சித்தரஞ்சன் நாணயத்தைக் கண்டு வியந்து, "இந்தப் பணம் எங்களுக்குத் தேவையில்லை - சித்தரஞ்சன்; அவ்வளவு முக்கியமானதும் அல்ல; உமது தகப்பனார் நீதிமன்றச் சட்டத்தின்படி இன்சால்வன்சி நோட்டிஸ் கொடுத்து விட்டார். நீ அந்தக் கடனை எங்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்ற அவசியமில்லை" என்றார்.

அதற்கு, தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், என்ன பதில் கூறினார் தெரியுமா? இதைத்தான் மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய குடும்ப மான ஒழுக்கமாகக் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதால் இங்கே அதை வெளியிடுகிறோம். பணம் வேண்டாம் என்று கூறிய ஊரார்களிடம் தாஸ் கூறிய பதில் இது

'நீங்கள் கூறுவது சட்டப்படி நியாயமாக இருக்கலாம். ஆனால், மனசாட்சி, நியாயம் என்பவை எப்போதுமே சட்டத்தைவிட உயர்ந்தது. அது மட்டுமன்று, எனது குடும்பத்துக்கு நேர்ந்துவிட்ட அந்த மஞ்சள் நோட்டீஸ், இன்சால்வன்சி அவமானத்தை நான் நீக்க விரும்புகிறேன். அதனால், தந்தை பட்ட கடனை மகன் மறுபடியும் திருப்பிக் கொடுக்கின்றேன்' என்றார் சித்தரஞ்சன் தாஸ்,

தாயையும், தந்தையையும் முதியோர் இல்லத்துக்கு விரட்டும் இந்தக் காலத்தில், பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, பெண்டாட்டி பிள்ளை என்று குடும்பமாக்கிய பெற்றோருக்கு சோறு போடாமல் அடித்துத் துரத்துகின்ற பிள்ளைகள் நடமாடும் இக் காலத்தில், பெண்ணேவல் செய்தோழுகும் தலையணையடிமைகள் பெருகிவிட்ட இக்காலத்தில், சித்தரஞ்சன்தாஸ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களும் வாழ்வாங்கு வாழ்ந்தார்களே என்பதை வருங்கால இளைய தலைமுறைகளும் சிந்திக்க வேண்டும் என்பதே - நமது நோக்கம். ஏன் தெரியுமா?

இன்றைய இளைய தலைமுறைகளுக்கும் எதிர்காலத்தில் மக்களைப் பெறும் பேறு வாய்க்கும் அல்லவா? இப்போது நீங்கள் செய்யும் Action உங்களுக்கு எதிர்காலத்தில் Reaction ஆக மாறக் கூடாதல்லவா? அதனால்தான்.

ஒவ்வொரு இளைஞனும், சிறுவனும், மாணவனும், மாணவியும் சித்தரஞ்சன்தாசாக ஆகும் பண்பைப் பெற வேண்டும் என்கிறோம். :