பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அய்சனோவரும் - பாம்பன் அடிகளும் !

பாம்பன் சுவாமிகள்

மாணவ மணிகளே......... f

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த டிவைட், டி.அய்சனோவர் சிறுவராக இருந்தபோது ஏற்பட்ட விபத்தால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவர் காலைத் துண்டிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அந்த அதிர்ச்சியோடு வலி பொறுக்க முடியாத அய்சனோவர், தனது தம்பிகளை அழைத்து, 'இறை வழிபாடு செய்யுங்கள்; எனது கால் காப்பாற்றப்படும் என்றார்.

சகோதரர்கள் அன்று இரவு முழுவதும் இறை வழிபாடு செய்து, அண்ணன் காலைக் காப்பாற்றுமாறு இமை மூடாமல் இறைவனை வேண்டியபடியே இருந்தார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அண்ணன் கால் காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலேயே கருத்தும் கவனமுமாக வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தன.

மறுநாள் டாக்டர்கள் வந்து அவரைப் பார்த்தபோது, அய்சனோவர் படுக்கை முன்பு சகோதரர்கள் கண்களை மூடிக்கொண்டு இறை வழிபாடு செய்வதைக் கண்டார்கள்.

அப்போது சிறுவர் அய்சனோவர் என்ன கூறினார் தெரியுமா? "எனது தம்பிமார்களது இறை வழிபாடு அற்புதம் செய்திருக்கிறது. வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மருத்துவமும் எனக்குத் தேவையில்லை" என்று தனது தம்பிமார்களிடம் அய்சனோவர் கூறினார்.

படிப்படியாக அன்று இரவுக்குள் அவருடைய கால் துண்டிப்பு தேவைப்படாது என்ற நிலை காணப்பட்டது. இறை வழிபாடும் அப்போதே நிறுத்தப்பட்டது.