பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியா முழுவதும் ஒடுகின்ற இரயில் வண்டிகள் வரலாறு

| இந்தியன் இரயில்வே மாணவ மணிகளே! -

இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் ஒன்பது வகைகளாக இயங்கி வந்தன. அவை சிறுசிறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலமாக இயங்கி வந்தன.

மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, வடகிழக்கு ரயில்வே, வடகிழக்கு எல்லைப் பகுதி ரயில்வே, தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென்கிழக்கு ரயில்வே, மேற்கு திசை ரயில்வே என்று ஒன்பது மண்டலங்களாக ரயில்வே போக்குவரத்து நிர்வாகங்கள் இயங்கின.

இந்திய விடுதலைப் போராட்டத் தந்தையான அண்ணல் காந்தியடிகள் பிறந்த குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற நகரில், இந்திய தீபகற்ப ரயில்வே என்ற பெயரில் 16.4.1853-ஆம் ஆண்டில் முதன் முதலாக ரயில் வண்டி ஓட்டத் துவக்க விழா ஆரம்பமானது. இந்த ரயில் வண்டியில் 14 பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்டு, 400 பயணிகளை ஏற்றிக் கொண்டு, மூன்று ரயில் என்ஜின்களால் அது இழுக்கப்பட்டு அன்று புறப்பட்டது.

இந்த ரயில் வண்டி, சுல்தான், சிந்து, சாகிப் என்ற மூன்று ரயில் நிறுத்தம் இடங்களைக் கடந்து, 34 கிலோ மீட்டர் துரத்தை 57 நிமிடங்களில் சுற்றிச் சென்று; தானே என்ற நகருக்கு வந்து சேர்ந்தது.

அந்தக் காலத்தில் போர்பந்தர் ரயில் நிலையம் மரத்தால் உருவாக்கப்பட்ட இடமாக இருந்தது. இன்று அந்த ரயில் நிலையம் மிகச் சிறந்தக் கட்டட அமைப்புடன், பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றத்துடன், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் அதாவது - விக்டோரியா இருப்புப் பாதை முடிவு என்ற பெயர் கொண்ட இடமாக மாறி இருக்கின்றது.