பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 77

கல்கா - சிம்லா வழியாகச் செல்லும் ரயில், 102 இடங்களில் மலையைக் குடைந்து போடப்பட்ட ரயில் பாதையாகச் செல்லுகின்றது. இவ்வளவுக்கும் இது 96 கிலோ மீட்டர் தூரம்தான். என்றாலும், இந்த வண்டி 869 ரயில்வே பாலங்களைக் கடந்து செல்கின்றது.

தென்னிந்தியாவில் ஹசன் மங்கள் ரயில் பாதை பிரிவில் 'யாதகுமெரி' என்ற இடத்தில் முதன் முதல் சோலார் மின் சக்தியில் நிறுவப்பட்ட ரயில் நிலையம் இருக்கின்றது. இது 762.50 கிலோ மீட்டர் தூரம் போகும் கொன்கன் என்ற ரயில்வே பாதை. இது மேற்குத் தொடர்ச்சி மலையிலே அமைந்துள்ள நீளமான ரயில் பாதை.

இந்தியாவிலேயே மிக நீளமான ரயில் பாதைப் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் ஜம்முதாவி என்ற நகருக்கும். கன்னியாகுமரி கடல் முனைக்கும் மத்தியிலுள்ள எல்லா இந்திய முக்கிய நகரங்களை எல்லாம் இணைத்துக் கொண்டுச் செல்லும் மிகப் பெரிய ரயில் பாதை. இதன் நீளம் 3,726 கிலோ மீட்டர் தூரம்.

பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில்; புது தில்லிக்கும் அலகாபாத் நகருக்கும் இடையே 24 ரயில் பெட்டிகளுடன் ஓடும் மிகப் பெரிய ரயில் தொடராகும்.

கிழக்கு ரயில் பாதையில் பேலன் நகர் என்ற ரயில்வே நிலையம் உள்ளது. இது ஒன்றுதான் பெண் பெயரால் அமைந்த ரயில்வே நிலையம். இது பிறகு, பேலமித்ரா என்று பெயர் மாற்றப்பட்டு விட்டது. மாணவ மணிகளே! மேலே உள்ள விரிவான வரலாறுதான், இந்தியாவில் ரயில் வண்டிகள் எவ்வாறு வளர்ந்தன என்பதற்கான முழு விவரமாகும். நீங்கள் இதைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதா? இல்லையா?

எதையும் தெரிந்து வைத்துக் கொண்டால், அது சமயத்திற்கு ஊன்றுகோலாகவும் உதவக் கூடும் அல்லவா? அல்லது தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற மன நிறைவையாவது வழங்கும் சம்பவம்