பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 79

அந்தச் சட்டம், கடிதப் போக்குவரத்து நடவடிக்கை முறையில் தனியார் ஆதிக்கம் பெற்றிருந்ததை ஒழித்துக் கட்டியது.

சிந்து மாநில ஆளுநராக இருந்தவர், 1852-ஆம் ஆண்டில் முதன் முதலாக புகைப்படச் செதுக்குரு போன்ற ஒரு தபால் தலையை வெளியிட்டார்.

அந்த அஞ்சல் தலை சிந்து மாநில அரசு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருந்த விக்டோரியா மகாராணி திருவுருவத்தை, 1854-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி வெளியிட்டது. மக்களுக்குப் பயன்படும் வகையில் ஊரூர்களுக்கு அஞ்சல் போய்ச் சேரும் வகையில், 1863-ஆம் ஆண்டில் அஞ்சலகம் அலுவலகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறிது காலத்திற்குப் பிறகு அந்தத் தபால் வேலையை ரயில்வே மெயில் சர்விசுக்கு மாற்றப்பட்டது. அதைச் சுருக்கமாக RMS என்று கூறுவார்கள்.

அனைத்துலக நாடுகளின் அஞ்சலக யூனியனின் உறுப்பினராக இந்தியா 1876-ஆம் ஆண்டில் சேர்ந்தது.

எவ்வளவு தொகைக்குத் தபால் வகைகளை வேற்றிடங்களுக்கு அனுப்புகிறோமோ, அதன் மதிப்பீட்டுத் தொகைக்கேற்றவாறு அஞ்சல் தலையை ஒட்டுவது என்ற VPP அஞ்சல் போக்குவரத்து முறை 1877-ஆம் ஆண்டில் அறிமுகமானது.

முதன் முதலாக அஞ்சல் அட்டை Post Card போக்குவரத்து முறை 1879-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊரூர்களுக்கு தனியார் பண்ம் அனுப்பி வைக்கும் பணவிடைத் தாள் முறை (Money Order: 1880-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப் பட்டது.

அஞ்சலகக் கிளை அலுவலகங்களிலே பொது மக்கள் தங்களது பணத்தைச் சேமித்து வைக்கும் Savings Bank முறை 1882-ஆம் ஆண்டில் அறிமுகமானது.

இரயில்வே நிலையங்களிலே தபால்களை ஊரூருக்குப் பிரித்தனுப்பும் (Sorter) திட்டத்தை அஞ்சல் துறை 1887-ஆம் ஆண்டில் நுழைத்தது.