பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

அருமையான டிக்ஷ்னரியை, அகராதியைத் தொகுத்து எழுதிய மேதையானார். உலகம் இன்றும் அவரை வாழ்த்துகிறது.

தனது கடைசிக் காலத்தில் சாமுவேல் ஜான்சன் மரணப் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபோது, இரண்டே இரண்டு ஆங்கில மொழிச் சொற்களைச் சொல்லிச் சொல்லி அழுதார்.

என்ன? அந்த வார்தைகள் தெரியுமா? அவை : "Live, well' என்பவையே. ஆங்கில மொழிக்கு டிக்ஷ்னரியைத் தொகுத்த அவர், அந்த மொழியிலே கடைசியாக - இரண்டே இரண்டு சிறிய சொற்களைத்தான் அவர் கண்டுபிடித்தார்.

அந்த வார்த்தைகளின் தத்துவம்தான் அவரது மரணநொடியிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

சாவின் பிடிப்பிலே சிக்கிக் கொண்டிருந்த டாக்டர் ஜான்சனுடைய மரண நினைப்பு என்ன தெரியுமா? வாழ்க்கை அதாவது Living என்ற தத்துவ அருமை தான்!

ஆனால், லார்டு பைரன் என்ற பெருங் கவிஞரின் மரண சிந்தனை என்ன தெரியுமா? "Sleeping" அதாவது உறங்கிக் கொண்டிருத்தலாகும்.

அந்தக் கவிமேதை, தான் சாகும் போது, "l must sleep now' நான் இப்போது தூங்க வேண்டும் என்று சாவைத் தூக்கம் என்றார்.

இந்தத் தத்துவத்தைத் தான் திருவள்ளுவர் பெருமானும் தனது தமிழ் மறையில், 'உறங்குவது போல்வது சாக்காடு என்றார். மாணவ மணிகளே நன்றாகக் கவனத்தில் நிறுத்துங்கள்! சாவு, உறக்கம் போன்றது. கவிதை உலகில் ஈடிணையிலா அந்த ஆற்றல் பெற்ற பெரும் கவிஞர். தாழ்ந்த குரலில் - மெதுவாக, தான் வானுலகில் உறங்கப் போகும், அதாவது இரண்டறக் கலந்து விடும் வானுறையும் தூக்கத்தை விரும்பியே "Sleep sleep என்று கூறியவாறே உயிர் நீத்தார்!

கிறித்துவ மதத் தீர்க்க தரிசியான இயேசு நாதர், தனது மரணத்தின்போது, ஹேலிலாமா ஜபக்தானே, ஹேலிலாமா ஜபக்தானே என்று மிக, மிகத் தாழ்ந்த குரலிலே இறையிடம் முறையிட்டார்.

"தந்தையே அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று, இயேசு கிறித்து சிலுவையில் தான் இறப்பதற்கு முன்பு மரணக் குரலில் தனது பிதாவிடம் இறைஞ்சினார்.

இந்திய விடுதலையின் தந்தையான காந்தியண்ணல், நாதுராம் விநாயகக் கோட்சே என்ற இனவெறியனது கைத் துப்பாக்கியால்