பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ரிலேட்டிவிட்டி தத்துவம் : அய்ன்ஸ்டின் விளக்கம்!

மாணவ - மணிகளே!

ஒரு விடுதிப் பணிப்பெண் - விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டினிடம், அவருடைய ரிலேட்டிவிட்டி (Relativity) கொள்கையைப் பற்றிய விளக்கம் கேட்டாள்.

மாணவ மணிகளே! ரிலேட்டிவிட்டி என்றால், சார்பியல் கோட்பாடு. இது ஐன்ஸ்டின் கண்டுபிடித்த அறிவியல் கொள்கை. அதாவது, அளவைகள் யாவும் ஒன்றை ஒன்றுச் சார்ந்தனவே அல்லாமல், தனிநிலை இயல்புகள் 翠_6@L让J6芭T அல்ல' எனும் ஆய்வுக் கொள்கைதான் - ரிலேட்டிவிட்டி தத்துவம் ஆகும். இந்தக் கொள்கைக்குத்தான் அந்த விடுதிப் பெண் விளக்கம் கேட்டாள்; புரிந்து கொள்ள.

அவள் கேள்விக்கு ஐன்ஸ்டின் சொன்ன பதில் இது 'அம்மையே! நான் ஒரு முறை எனது கண் பார்வை தெரியாத நண்பருடன் ஊருக்கு வெளியே சொந்தப் பணி காரணமாகச் சென்றேன். நான் சென்ற நேரம் கடுமையான கோடை காலம்! வெயில் தகித்த வெப்பக் களைப்பால் நான் அந்த நண்பரிடம் கூறினேன், ஒரு கோப்பை பால் குடிக்க வேண்டும் போலிருக்கு - என்று:

அந்த நண்பர், பாலா? அது என்ன பால்? என்றார். "அது ஒரு வெள்ளையான நீர் இயலாலான ஒரு திரவப் பொருள் என்றேன்.

'திரவப் பொருளை நான் புரிவேன். ஆனால், வெள்ளையான என்றீரே. அது என்ன வெள்ளை?’ என்றார்: