பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பெரியாரின் நகைச்சுவை பேராசிரியர்களுக்கும் பொருந்துமே!

தந்தை பெரியார்

யற்பியல் (Physics) பேராசிரியர், உயிரியல் (Biology) பேராசிரியர், வேதியியல் (Chemistry) பேராசிரியர் மூவரும் அவர்களது கல்லூரிக்குப் புறப்பட்டார்கள்.

அன்று ஒரே மழை! அதனால் அவர்கள் செல்லும் பாதைகள் சேறும், சகதியுமாய், பள்ளமும், மேடுமான மண் குழிகளாய், சதசதவென காணப்படும் சகதிகள் மயமாகக் காணப்பட்டன.

ஓர் ஆழமான பெரிய பள்ளம்; அதன் நிறைய தண்ணி. அதாவது சேறும் நீரும் குழியில் நிரம்பியருந்தது. அதைப் பார்த்தவுடன் இயற்பியல் பேராசிரியர் மற்ற இரு பேராசிரியர்களைப் பார்த்து என்ன கூறினார் தெரியுமா?

"நான் இந்தக் குழியின் ஆழத்திற்குள் சென்று, அதன் அடர்த்தி, நெருக்கம், செறிமானம், பரும அளவுடன் கூடிய எடை மானத்துக்குள்ள விகிதம் என்னவென்று பார்த்துவிட்டு வருகிறேன்' என்று குழியில் குதித்தார்.

சிறிது நேரம் கழித்து உயிரியல் (Biology) பேராசிரியர், அடுத்திருந்த பேராசிரியரைப் பார்த்து 'நானும் இதனுள்ளே குதிக்கின்றேன். உள்ளே சென்று நுண்ம உயிரினம் நுட்பத்தைக் கவனித்து வருகிறேன்” என்று சொல்லி அவரும் குதித்து விட்டார் - குழியுள்.

ஒரு மணி நேரம் ஆனது. இரு பேராசிரியர்களும் குழிக்குள்ளே இருந்து வெளியே வராததால், வேதியல் (Chemistry) பேராசிரியர் தனக்குத் தானே, "குதித்துவிட்ட இரு பேராசிரியர்களும், ஒரு வேளை தண்ணிலேயே கரைந்து விட்டார்களோ அதனால்தான் அவர்கள் திரும்பி வரவில்லையோ' என்று கூறிக் கொண்டே அவர் நடந்தார்!