பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

5
சாமர்த்தியமான சோதிடன்

ஒரு சிற்றூரில் ஆனந்தன் என்பவன், தன் மனைவியோடும், இரண்டு குழந்தைகளோடும் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அவன் கைவசம் இருந்த பணமும், நகையும் செலவழிந்தது; வேலை எதுவும் கிடைக்கவில்லை, சில நாட்கள் பட்டினி கிடக்கவும் நேரிட்டது.

மனைவி, மக்களோடு ஊர் ஊராக அலைந்தான் ஆனந்தன். அடுத்த ஊரில் இருக்கும் செல்வந்தன் ஆண்டான் செட்டி வீட்டுக்கு வேலை பார்க்க ஒரு பெண் தேவை என்பதை கேள்விப்பட்டான் ஆனந்தன்

தன் மனைவியையும் குழந்தைகளையும் ஆண்டான் செட்டி வீட்டில் வேலை செய்யும்படி ஏற்பாடு செய்தான்.

சிறிது தொலைவில் உள்ள வணிகனிடம் கணக்கனாக வேலை பார்த்து, அங்கேயே ஒரு அறையில் தங்கினான் ஆனந்தன்.

சில நாட்களுக்குப் பிறகு, ஆண்டான் செட்டி மகளுக்கு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்திற்குச் சென்று நல்ல உணவு அருந்தலாம் என்று மிக ஆவலோடு இருந்தான் ஆனந்தன். ஆனால், அவனை அழைக்கவில்லை. சிறிது வருத்தம் உண்டாயிற்று, ஆயினும், தன் மனைவி மக்களாவது திருமண விருந்து உண்டதில் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது.

அடுத்த நாள் ஆனந்தனின் மனைவி அவனைக் காண வந்தாள்.