பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பாட்டுக்கு ஏற்றப்படி நூலை ஆட்டிக் கொண்டிருந்தாள் பண்ணையார் மகள்.

அவ்வப்போது, மாப்பிள்ளையின் தலை அசைந்து ஆடியது. 'மாப்பிள்ளை நல்ல ரசிகராக இருக்கிறாரே' என்று பாடகர் நினைத்து, மேலும் சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தார்.

திடீரென்று பாடகரைப் பார்த்து, “உம்முடைய பாட்டை நிறுத்தும்!” என்றார் மாப்பிள்ளை.

பாடகர் திடுக்கிட்டார். பாட்டில் - ராகத்தில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ என்று குழப்பத்தில் ஆழ்ந்து, பாட்டை நிறுத்தி விட்டு, மாப்பிள்ளையைப் பார்த்தார்.

“என் குடுமியில் கட்டியிருந்த நூல் அறுந்து விட்டது” என்றான் மாப்பிள்ளை.

பாடகர் உள்பட அனைவருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை.

அதன்பின் ஒரு பாடகரைக் கொண்டு, மாப்பிள்ளைக்கு இசைப்பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

ஏழையாக இருப்பது குற்றம் இல்லை, ஆனால் முட்டாளாக இருக்கக் கூடாது.


9
உயிரைக் காப்பாற்றிய கை

ஒரு ஊரில் பள்ளி ஆசிரியையாக இருந்தார் ஒரு பெண்மணி. அவளுடைய வலது கை முழுங்கையிலிருந்து விரல்கள் வரை வெண்மையும், கருமையும் கலந்து பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.