பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

“முரட்டுக் காவல்காரன் ஒருவனை நியமிப்பேன். அடிக்கடி நானும் தோட்டத்திற்குச் சென்று, “யாரடா அங்கே? எச்சரிக்கை!” என்று உரக்கக் கூவுவேன்!”

குடியானவன் இவ்வாறு யோசனை செய்து கொண்டிருந்ததில், தன்னையே மறந்து விட்டான்.

தான் வேறு ஒருவனுடைய தோட்டத்தில் நிற்பதும் அவனுக்கு நினைவில்லை.

மன மகிழ்ச்சியினால், அவன் கடைசியாக எண்ணியபடி உரத்த குரலில், “யாரடா அங்கே எச்சரிக்கை!” என்ற கூறி விட்டான்.

தோட்டத்தில், வேற்று ஆள் குரல் கேட்கவே, காவல்காரன் ஒடி வந்து, குடியானவனைப் பிடித்து, நையப் புடைத்து அனுப்பினான்.


12
நிலத்தில் கிடைத்த மோதிரம்

ஒரு பண்ணையாருக்குச் சொந்தமான நிலத்தில் கூலிக்காக ஒரு ஏழை உழுது பயிரிட்டு வந்தான்.

வழக்கம் போல் விவசாயி உழுது கொண்டிருக்கும் போது, ஒரு தங்க மோதிரத்தைக் கண்டு எடுத்தான்.

வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து விட்டான், தான் கண்டு எடுத்த மோதிரத்தை தன் மனைவியிடம் காட்டினான்.

அதைப் பார்த்ததும் அவன் மனைவி, தனக்குக் காதோலை செய்து போட்டுக் கொள்ள ஆசைப்பட்டாள்.

“நிலம் பண்ணையாருடையது, நான் கூலிக்காகவே