பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

உழுகிறேன்; நிலத்தில் கிடைப்பது அவரைச் சேர்ந்தது. நாம் எடுத்துக் கொள்வது அவருக்குத் துரோகம் செய்வதாகும் என்றான் அவன்.

கணவன் கூறியது மனைவிக்குத் திருப்தி அளிக்கவில்லை.

“பண்ணையாருக்கு எப்படி தெரியும்? அவர் வந்து பார்த்தாரா?” என்று வாதாடினாள் மனைவி. இருவருக்கும் இரவு முழுதும் தூக்கம் வரவில்லை.

“பண்ணையார் வந்து பார்க்க வில்லை தான். ஆனாலும், என் மனச்சாட்சி உறுத்துகிறது” என்று கூறிவிட்டு, காலையில் எழுந்து பண்ணையாரிடம் சென்று, மோதிரத்தைக் கொடுத்து விவரத்தைக் கூறினான் அவன்.

பண்ணையார், விவசாயியின் நேர்மையைப் பாராட்டி, அதை அவனுக்கே பரிசாகக் கொடுத்து விட்டார்.


13
காக்கையின் பகுத்தறிவு

ஒருவன் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு, பகல் உணவைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது ஒரு காக்கை, சற்று தள்ளி நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவனோ வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவனுடைய எச்சில் இலைக்கு காத்துக் கிடக்கிறது காக்கை

அவன் கையைக் கூட அசைக்கவில்லை.

காக்கை பொறுமை இழந்து, “ஏ, மனிதனே! நீ உண்ணும்