பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அவனைப் பார்த்து, “என் திட்டத்தில் உமக்கு விருப்பம் இல்லையா?” என்று கேட்டான்அரசன்.

ஒரு வெள்ளைத் தாளை எடுத்து, அதை இரண்டாக, மூன்றாக மடித்தான். அதைப் பலமுறை விரல்களால் அழுத்தி, பிறகு நகத்தால் தேய்த்து, அதை அரசனிடம் நீட்டினான் அந்த அமைச்சன்.

“அரசே! நீங்கள் எதையும் சாதிக்கக் கூடிய வல்லமை உங்களுக்கு உண்டு. உங்கள் எதிரில் எந்த எதிர்ப்பும் நிற்காமல் மறைந்து விடும் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகையால், நான் காட்டிய தாளில் உள்ள மடிப்பை, அதில் அடையாளமே தெரியாதபடி, செய்ய முடியுமா பாருங்கள்.” என்றான் அந்த அமைச்சன்.

அதைக் கேட்ட அரசன் தாளை வாங்கிப் பார்த்து சிந்திக்கலானான்.

இரத்தத்தில் பரம்பரையாய் ஊறிப்போன, மனத்தில் ஆழப் பதிந்த எதையும் அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. என்பதை உணர்ந்தான்.

படிப்படியாகத்தான் மாற்றம் உண்டாகும்.


18
கடவுள் வேற்றுமை காட்டுவாரா?

ஒரு கிராமத்தில், ஒரு சமயம் காலரா நோய் பரவியது. சிலர் மருத்துவமனைக்குச் சென்றனர். சிலர் இறந்து போனார்கள்.

அந்த ஊரில் இருந்த பண்ணையார் பயந்து, பட்டணத்துக்குச் செல்லத் தீர்மானித்தார்.