பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

”ஆம், கடவுளிடமும் எனக்கு அளவற்ற பிரியம் உண்டு” என்றார்.

பேரன் உடனே “தாத்தா! அது எப்படி முடியும்? உங்களுக்கு மனம் (உள்ளம்) ஒன்று தானே இருக்கிறது?” என்றான்.

தாத்தா திணறிப் போனார். “உலகப் பற்றுள்ள மனத்தில் கடவுள் பற்று எப்படி இருக்க முடியும்?” என்று நினைக்கலானார்.

ஒரே மனம், இரண்டு பேர்களிடம் எப்படி பிரியம் வைக்க முடியும்?


20
தவறு யாருடையது?

அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய அறையில் இருந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

அப்போது, பாலைக் கொண்டு வந்து அவர் மேஜை மீது வைத்து விட்டுச் சென்றார் அவருடைய மனைவி.

அதிகாரி அதைக் கவனிக்காமல் எழுதிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது, கல்லூரியில் படிக்கும் அவர்களுடைய மகள் ஏதோ ஒரு புத்தகத்தை எடுப்பதற்குச் சென்றாள்.

மேஜை மீது இருந்த பால் குவளையில் அவள் கைபட்டு, பால் கொட்டிப் போயிற்று.

உடனே அந்தப் பெண், “அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தவறுதலாக என் கைபட்டு, பால் கொட்டிவிட்டது” என்றாள்.