பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"அம்மா! உன் தவறு அல்ல, உன் தாய் பாலைக் கொண்டு வந்து வைத்ததுமே, அதை எடுத்து நான் குடித்திருக்க வேண்டும். அப்போதே குடிக்காதது என் தவறு” என்றார் அதிகாரி.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரியின் மனைவி வந்து, “உங்கள் இருவர்மீதும் தவறு இல்லை, நீங்கள் எழுதிக் காண்டிருக்கும் போது நான் கொண்டு வந்து பாலை வைத்தது ன் தவறு” என்றாள்.

ஒவ்வொருவரும் தங்கள் தவறை உணர்ந்தது உள்ளத்தை நகிழச் செய்தது.

தவறை உணர்வது எவ்வளவு நேர்மை!


21
தங்கையின் பரிவு

அக்காளும் தங்கையும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை உண்டாகும்.

ஒரு நாள் இருவருக்கும் சச்சரவு அதிகமாயிற்று. அப்பொழுது தங்கையின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அடி அடி என்று பலமாக அடித்து விட்டாள் அக்காள்.

அதை அறிந்த பெற்றோர் அவளைத் திட்டி, ஒரு அறையில் தள்ளி, பூட்டி வைத்தனர், மேலும்,அவளுக்குப் பகல் உணவு அளிக்காமல் பட்டினி போட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. அப்பளம், வடை, பாயசத்துடன் எல்லோரும் வயிறு நிறைய உண்டு மகிழ்ந்தனர்.

அக்காள் பட்டினியாக கிடப்பாளே என்று இரக்கப்பட்டு, பெற்றோருக்குத் தெரியாமல், உணவை எடுத்துச் சென்றாள் தங்கை.