பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

மதத்திற்கும் வேறுபாடு தெரியவில்லையா? புத்த மதம் காமகுரோத பாவங்களை வெறுக்கிறது, உறவினருடன் காரணம் இல்லாத சச்சரவுகளை விரும்பவில்லை. அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பு அளித்து, அன்புவழி ஒன்றையே நிலைநிறுத்தக் கூடிய தாயகமான புத்த மதத்தை, அவமதித்துப் பேசாதே. ஜீவகாருண்யத்தை உயிர்நாடியாகக் கொண்டது அது. உயர்ந்த கோட்பாடு களைக் கொண்டது புத்த மதம். மரண பயத்தை ஒழிப்பதோடு, உயிர் வதைகளையும் தடுக்கிறது” என்று பலவாறு கூறினான்.

இளைஞனாகிய உனக்கு அறிவு வளர்ச்சி போதாது. உனக்குத் தெரிந்ததோ கடுகு அளவு, தெரிய வேண்டியதோ கடல் அளவு. ஆகையால், உன்னுடைய அற்ப அறிவைக் கொண்டு எதையும் மதிப்பிடும் தகுதி உனக்கு இருப்பதாக எண்ணுவது அறிவீனம்” என்று மேலும் விளக்கிக் கூறினான்.

என்ன சொல்லியும் அவன் புரிந்து கொள்ளாமல், வெறுப்பே அவனிடம் மிகுதியாகக் காணப்பட்டது.

அதனால் வெறுப்படைந்த விசாகன் வேதனையோடு அரசனிடம் சென்று, தன் மகனின் போக்கைப் பற்றிக் கூறினான்.

அரசன், இரத்தினத்தை அழைத்து வரச் செய்து, அவன் ஒரு மதவெறுப்பாளன், நாட்டின் நயவஞ்சகன் என்று குற்றம் சாட்டி, அவனுக்கு மரண தண்டனை விதித்தான்.

மகனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையைக் கேட்டதும் விசாகன் அதிர்ச்சி அடைந்தான். தன்னுடைய ஒரே மகனான அவனுக்குக் கருணை காட்டுமாறு அரசனிடம் மன்றாடினான்.

விசாகனின் கோரிக்கையை ஏற்று, சிறிது கருணைகாட்டி, மரணதண்டனையை மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைத்து. அதுவரை அவனை விசாகன் பொறுப்பில் வைத்துக் கொண்டு