பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கண்ணிகளை கத்தரிப்பது போல், பற்களை வைத்து பாசாங்கு செய்து,

வேடனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது எலி.

கண்ணியிலிருந்து சீக்கிரமே விடுபட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தது பூனை.

பொழுது விடிந்தது, வேடனும் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட எலி, கண்ணியின் சுருக்கை இறுகச் செய்துவிட்டு, வேடனுக்கு அஞ்சி ஓடத்தொடங்கயிது.

எலியிடம் இது நியாயமா? உதவிபுரிவதாகக் கூறி, நம்பிக்கை மோசம் செய்து விட்டாயே?” பரிதாபமாகக் கேட்டது பூனை.

“விரோதிகள்கூட சந்தர்ப்பம் காரணமாக, நண்பர்களாக ஆவார்கள். ஆனால், அத்தகைய நட்பானது உண்மையான நட்பாகவும், வெகு காலத்துக்கு நீடிக்கக் கூடியதாகவும் இருக்காது” என்று கூறி, ஒரே ஓட்டமாக ஓடியது எலி.

பிறவியிலேயே பகைவர்களாக இருப்பவர்கள் நட்புக் கொள்ள முடியாது.


36
ஆப்பை அசைத்த குரங்கு

ஒரு மரவியாபாரி, காட்டில் உள்ள மரங்களை, தொழிலாளர்களைக் கொண்டு வெட்டச் செய்து விற்பனை செய்து வந்தான்.

வெட்டப்பட்ட மரங்களை பயன்படுத்துவதற்கு ஏற்றபடி ரம்பத்தால் அறுப்பார்கள். அப்படி அறுக்கும்போது, மரத்தின் பிளவுக்கு மத்தியில் ஒரு முளையை அதில் நட்டு வைப்பார்கள்.