பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

54. புத்திசாலி பிழைப்பான்

ஒரு ஊரில் நான்கு இளைஞர்கள் இருந்தனர். அவர்களில் மூன்று பேர் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்குப் புத்தி என்பது கொஞ்சம் கூட இல்லை. அவர்களில் மற்றொருவன் போதிய கல்வி அறிவு இல்லாதவன். ஆனால் புத்திசாலித்தனம் உடையவன்.

ஒரு நாள் நான்கு இளைஞர்களும் கூடி ஆலோசித்தனர். வேற்று நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசனை மகிழ்வித்து பொருள் தேட வேண்டும் இல்லையானால், கற்ற கல்வியின் பயன் என்ன? என்று யோசித்து வெளிநாடு செல்லத் தீர்மானித்தனர்.

ஒரு நாள் நால்வரும் ஊரைவிட்டுப் புறப்பட்டனர். வழியில், நம் “நால்வரில் மூவரைத்தவிர, மற்றொருவன் கல்வி அறிவு இல்லாதவன். ஆனால் அவன் புத்திசாலி, கல்வி இல்லாமல் புத்திசாலித்தனத்தால் அரசனை மகிழ்வித்துவிட இயலாது. நாம் தேடும் பொருளில் அவனுக்கு எப்படி பங்கு கொடுக்க இயலும். எனவே அவன் திரும்பி வீட்டுக்குப் போகட்டும்” என்றான் முதலாமவன்.

அப்பொழுது இரண்டாவது நண்பன், அறிவற்றவனே, உனக்குக் கல்வி அறிவு இல்லையாதலால், நீ எங்களுடன் வர வேண்டாம். நீ வீட்டுக்குத் திரும்பி செல்வாயாக" என்று கூறினான்.

மூன்றாவது நண்பன், இவ்வாறு கூறுவது நியாயம் இல்லை. ஏனெனில் இளமைப் பருவம் தொடங்கி இதுவரை ஒன்றாகப் பழகி, விளையாடி வந்திருக்கிறோம். இப்பொழுது அவனைப் புறக்கணிப்பது சரியல்ல. நண்பா, நீ எங்களுடன் வரலாம். நாங்கள்