பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெறியாளர் உரை எதிர்காலச் சமுதாயத்திற்கு எப்பொழுதும் பயன்படும் குறிப்பு நூல்களில் முதலிடம் பெறுவது அகராதியே. இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தில் குடிமக்கள் ஆன பிறகும் அவர்களுக்குத் துணை நிற்கும் நூலாகப் பயன்படும் வண்ணம் இந்த அகராதி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் தமிழ்த்துறைகள் உள்ளன, தமிழ்நாட்டில் வசிக்கும் பிறமொழியினர் பலர் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கின்றனர். தமிழ், ஆங்கில வழிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சில வாக்கியங்களை மொழி பெயர்க்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் இந்த அகராதி பயன்படும். சொற்களின் பொருளை ஆங்கிலத்திலும், தமிழிலும் தருவது மட்டும் இந்த அகராதியின் நோக்கமன்று. தமிழ்ப் பண்பு, மரபு முதலானவற்றின் அடிப்படைக் கூறுகளை ஆங்கிலம் அறிந்தோர் உதவும் வகையில் திருக்குறளிலிருந்து ஏராளமான எடுத்துக்காட்டுகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இந்நூலில் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. அவை காட்டும் வழி நடப்போர் நல்வாழ்வு பெறுவர் என்பது உறுதி. சொற்களின் பொருள்களை மட்டும் அகரவரிசைப் படுத்தித்தரும் தொகுப்பாக இந்நூல் அமைக்கப்படவில்லை. பொது அறிவு போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும் சில அரிய செய்திகள் பிற்சேர்க்கையில் தரப்பட்டுள்ளன. எப்பொழுதோ ஒருமுறை எடுத்துப் பார்க்கும் நூல் அகராதி என்ற எண்ணத்தை மாற்றி எப்பொழுதும் எவரும் படிக்கக்கூடிய ஒரு சுவையான பல்சுவைக் களஞ்சியம் இது என்ற எண்ணத்தைப் பிற்சேர்க்கை உருவாக்கும். 21ஆம் நூற்றாண்டில் இந்நூல் வெளியாவதால் கணினிச் சொற்கள் பட்டியல் ஒன்றும் பிற்சேர்க்கையில் தரப்பட்டுள்ளது.