பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழில் வெளியாகும் பல அகராதிகள் தொகுப்பாசிரியரின் பணியாகவே நிறைவுறும் ஆனால் ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்டு அகராதியைத் தயாரிக்கப் பல அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை பல நூற்றாண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. அதே போன்று இந்த அகராதிக்கும் நெறியாளர் என்ற புதிய பொறுப்பினை உருவாக்கி, அதனை எனக்களித்தவரும், என் நூல்கள் சிலவற்றை அழகிய முறையில் வெளியிட்டு வருபவருமாகிய பதிப்பாசிரியர் முத்தமிழ்க் கவிஞர், முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் எம். ஏ., பிஎச்.டி. அவர்களுக்கு நன்றி. திருத்தங்களையும் மாற்றங்களையும் பலமுறை செய்ய மனநிறைவுடன் உதவி செய்த திருவள்ளுவர் வரைகலையக உரிமையாளர் திரு. கி. செம்மல் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியினையும், நல்வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அகராதி ஒரு கை காட்டி மரமே, கைகாட்டி மரமே ஊர் ஆகாது, அதுகாட்டும் வழியில் நடப்போம், நடப்போர்க்கே நல்லுலகம் சொந்தம். வாழ்க தமிழ்! வளர்க மொழிபெயர்ப்புக் கலை! வான்முகில் முனைவர் ச. ச. குமார், எம். ஏ. எம். ஃபில்., பிஎச்டி, ஆய்வாளர் நூலகம் 9, பாகீரதி தெரு, மணவாள நகர், திருவள்ளூர் - 602002. பேசி : 95 - 4116 - 240947.