பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. ஆலவாய் நிகழ்ச்சிகள்


குருநாதன் கனவு நிலையில் தந்த ஆணைப்படி மாணிக்க வாசகர் திரு ஆலவாய்க்கு (மதுரைக்கு) வருகின்றார். முன்னரே அவர் எழுதிய வோலையைத் துரதர் வாயிலாகப் பெற்ற பாண்டியன் சினம் தணிந்திருந்தனன். இந்நிலையில் வாதவூரடிகள் அரண்மனை சென்று மன்னனை வணங்குகின்றார். அவரைக் கண்ட பாண்டியன் அன்புடன் வரவேற்றுச் சிறப்பிக்கின்றான். பின்னர் தனியே அழைத்துச் சென்று, "எவ்வளவு புரவிகள் வாங்கினர்? எந்தத் துறையில் தங்கியிருந்தீர்? தங்குவதற்கு வசதிகளுடன் கூடிய இடம் கிடைத்ததா?’ என்பனபோன்று பலவாறு வினவினான். இந்த வினாக்களுக்கெஎலாம் அடிகள் ஆலவாய் அமர்ந்து உறையும் அண்ணலின் திருவருளை மனத்திற் கொண்டு தக்கவாறு விடை அளிக்கின்றார். அடிகளின் இன்னுரையைக் கேட்ட பாண்டிய மன்னன் மிகவும் மகிழ்ச்சியுற்று வரிசைகள் பல நல்கி அவர்தம் மாளிகைக்கு ஏகப்பணிக் கின்றான்.

வேந்தன்பால் விடைபெற்ற அடிகள் ஆலவாய் அவிர் சடை அண்ணலின் திருக்கோயிலை அடைந்து அவரைப் பணிந்து, "அண்ணலே, புரவிகள் விரைவில் வரும் என்று வேந்தன் மகிழ உரைத்தேன். குதிரைகள் வாங்க அரசன் தந்த பொருள்களையெல்லாம் அடியார்கட்கும் திருக் கோயிலுக்கும் செலவிட்டேன்.உன்னையல்லால் அடியேனுக்கு துணையாவார் ஒருவரும் இலர்' எனத் தனி நின்று குறை இரக்கின்றார். அப்போது "அஞ்சல், அஞ்சல்" என்றதோர் அருள்வாக்கு விசும்பிடை எழுகின்றது.இதனைச் செவிமடுத்த அடிகள் தேறுதலடைகின்றார். தமது மாளிகையிற் சென்று இறைவனை வழிபட்டு அமுது செய்கின்றார். கருதிய செயல்