பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii பாங்கில் கொத்துக் கொத்தான அழகிய சிற்ப வடிவங்களும், கோயிலுக்கு உள்ளே அமைந்த உறுதியான கற்றுாண்களும் அவற்றில் கைபுனைந்தியற்றிய அற்புதமான சிற்ப வடிவங் களும் பண்டைத்தமிழரின் கலைச் சிறப்பையும் நாகரிக முதிர்ச்சியையும் பறைசாற்றிக் கொண்டுள்ளன.” என்ற பகுதி இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. இவருடைய நடையில் தத்துவம் தாண்டவமாடும்; அறிவியல் பல அழகு செய்யும். பிறப்பால் பேராசிரியர் ரெட்டியார் சைவர்; வளர்ப்பா அம் சைவர். வாழ்வால் அனைத்தும் கடந்த அனைவரை யும் அன்பால் பிணைக்கும் அருளாளர். முக்தி நெறியே அறியாத' என்னும் மணிவாசகர் பாடலை ஆசிரியர் நெஞ்சம் அசை போடுகின்றது. முக்திநெறி, பக்திநெறி இரண்டும் அவர் சிந்தனையில் இடம்பெறுகின்றன. முக்தி நெறி-இது சரியை, கிரியை யோக, ஞானங்களால் முதிர்ந்த அறிவுடைய பெருமக்கள் மட்டுமே அறிந்து கடைப்பிடித்தற் குரிய அருமையுடையது. பக்திநெறி அப்படி அன்று. பேரன்பின் முதிர்ச்சியே பக்தி. இஃது உலக மக்கள் அனைவரும் அன்பினால் பின்பற்றுதற்குரிய எளிமை வாய்ந்த வழி. முக்திநெறியின் அருமையும்,பக்திநெறியின் எளிமையும் வாசகர் வாக்கில் விளங்கும் வண்ணம் உண்மையை உணர்ந்து தெளிவு செய்யும்போதே ஆசிரியரின் நெஞ்சம் ஆழங்கால் பட்டு வைணவ நெறியின் மாட்சியை யும் கண்டு கற்பவர்க்கு நன்கு புலனாக்குகின்றது. மாணிக்கவாசகர்தம் பிறப்பையும், வளர்ப்பையும் இன்று எழுதுகின்ற ஆசிரியர் என்றோ தாம் சென்று கண்ட திருவாதவூர்ச் சூழலை நெஞ்சில் நிறுத்தி நமக்கும் நினைவூட்டுகின்றார். அந்தப் பகுதியில் தொன்மையியல் கூறுகள் அமைந்து விளங்கக் காணலாம். "உழவுத் தொழிலே மக்களின் வாழ்க்கைத் தொழில். இந்த ஊரிலுள்ள ஏரியின் மதகின்மீது உள்ள ஒரு சிலை நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/14&oldid=864016" இலிருந்து மீள்விக்கப்பட்டது