பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் நிகழ்ச்சிகள் 133



தேடிப் பார்த்தும் அவன் காணப்பட்டிலன். அவனை அனுப்பிய பிட்டுவாணிச்சியை அடைந்து அவளைத் தண்டித்தற்கு நெருங்குகின்றனர். அவர்கள் அவளை அணுகுவதற்கு முன்னரே முதியவளாகிய அந்த அம்மை சொக்கன் திருவருளால் மண்ணுலகத்தவர் காண மாறா இளநலம் வாய்ந்த தெய்வ வடிவத்தினைப் பெற்று எல்லா உலகத்திற்கும் மேலாகிய சிவலோகத்தை அடைகின்றாள், இந்த அழகிய காட்சியைக் கண்ட தண்டத் தலைவர்கள் திகைத்து அதிசயித்து நிற்கின்றனர்.

இறைவனாகிய, கூவியாள் மேல்பட்ட அடி நாடாள் வேந்தனாகிய பாண்டியன் முதலாக இவ்வுலகில் வாழும் நிற்பன நடப்பனவாகிய எல்லாவுயிர்களின் முதுகிலும் ஏனைய உலகங்களின் வாழும் தேவர் அசுரர் முதலிய எல்லோர் முதுகிலும் பட்டுப் புடைப்பினை உண்டாக்கு கின்றது. 16 மதுரை நகர மக்கள் இதனை யறிவதற்காக மன்னனை அணுகி, ஒருவர் மேல் பட்ட அடி யாவர்மேலும் பட்டதற்குக் காரணம் என்ன” என்று வினவுகின்றனர். பாண்டியன் தன் முதுகைக்காட்டி இதன் உண்மையினைச் சொக்கனே அறிவான்’ என்கின்றான். அப்பொழுது வாதவூரர் பொருட்டு இறைவன் அருளால் வானில் ஒர் அருள் வாக்கு எழுகின்றது. "பாண்டியா, நீ நூறாண்டு


  கொண்டவன் முதுகில் வீசிப்
     புடைத்தனன் கூடை யோடு 
  மண்தனை உடைப்பிற் கொட்டி
     மறைந்தனன் நிறைந்த சோதி
                     -மண்சுமந்து - 52 

என்ற பாடலில் இதனைக் காணலாம்.

16. எல்லார் முதுகிலும் பட்டதழும்பை பரஞ்சோதியர் விளக்குவதை அவர் பாடல்களைப் படித்து (பிட்டுக்கு மண்சுமந்த. 53, 54, 55, 56) அநுபவித்து மகிழ வேண்டும்.