பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலவாய் அருளிச் செயல்கள் 153 மல நாசம் செய்து ஞானத்தை விளக்குவது: அண்ணிப்பான் - அணுகி அருள் வழங்குவான்.) என்று சிவபுராணத்தின் முதற்கண் பரம்பொருளின் திருவடி களை வாழ்த்திப் போற்றுகின்றார். அடுத்து, இறைவனுடைய திருவடிச் சிறப்பினை, வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெங்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க (5-10) (வேகம் கெடுத்து - மனவிருத்திகளின்வேகத்தை அடக்கி: பிஞ்ஞகன் - தலைக்கோலமுடையவன்; புறத்தார் . புறச்சமயிகள்) என வெற்றித்திறம் விளங்க விரித்துப் போற்றுகின்றார். இங்ங்னம் சிவபெருமான் திருவடிகளுக்கு வாழ்த்தும் வெற்றியும் கூறிய வாதவூரடிகள், ஈசனடி போற்றி எங்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே கின்ற கிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைகம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி (11-16) (ஈசன் - அனைத்தையும் ஆள்பவன்: தேசன் - ஒளி யுள்ளவன்) என எண்வகைப் போற்றி வாசகத்தால் எண் குணத் தானாகிய சிவபெருமானுக்கு வணக்கமும் கூறுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/173&oldid=864085" இலிருந்து மீள்விக்கப்பட்டது