பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற இடங்களில் அருளிச் செயல்கள் 167



‘சுவாமிமலை வாழவந்த-பெருமாளே என்று தம் திருப் புகழில் போற்றுவர். ஆலங்குடி தட்சிணாமூர்த்தி பெரும் புகழ் பெற்றவர். (இது பாடல் பெற்ற தலம் இல்லை). திருவாவடுதுறை நந்திகேசுவரர் மகிமை பெற்றவர்: சூரிய நயினார் கோயில் நவக்கிரகங்கள் பக்தர்களை ஈர்க்கும் அற்புதத் தலம்.

திருவிடைமருதூர்ப் பெருமானை மணிவாசகர் பாடல்கள் பாடிப் பரவவில்லை. எனினும் வேறொரு காரணத்தால் இத்தலம் சிறப்பு பெற்றுள்ளது. அதுதான் சோழ மன்னன் ஒருவனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கின வரலாறு. ஒருமுறை சோழ மன்னன் ஆராயாது பிராமணன் ஒருவனைக் கொலை செய்து விடுகின்றான்; பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பற்றித் துன்புறுத்துகின்றது. இது நீங்கப் பல தலங்கட்கும் சென்று வழிபடுகின்றான்; ஆனால்,தோஷம் நீங்கவில்லை. இறுதியாகத் திருவிடைமருதூர் ஈசனை வழிபடும்போது பிரம்மஹத்தி கோயிலின் வாயிலிலே காத்திருக்கின்றது. ஆனால் அரசன் இறைவனின் அருள் பெற்றுக் கோயிலின் பின்வழியாக வெளியேறுகின்றான். அரசன் வருவான், வருவான் என்று பிரம்மஹத்தி இன்றும் காத்துக் கொண்டிருப்பதாக ஐதிகம். ஏமாந்து போய் அமர்ந்திருக்கும் பிரம்மஹத்தியின் இருப்பைக் காட்ட திருக்கோயிலின் கிழக்குக் கோபுர வாயிலில் ஒரு சிலை உள்ளது. பேய்ச் சேட்டைகளால் பீடிக்கப்பெற்றவர்கள் பலர் இங்கு வந்து



7. திருவாவடுதுறை : நரசிங்கம்பேட்டையிலிருந்து 1/2 கல் தொலைவு. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. திருமூலர் திருமந்திரம், ஆருளிய தலம். சம்பந்தர் தம் தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டு இறைவனைப் பாடி 1000 பொன் பெற்றதல்ம் (அப்ப்ர் 4.56 : 1) திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் தொடர்பு இத் தலத்திற்கு உண்டு.