பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற இடங்களில் அருளிச் செயல்கள் 131




36. திருக்கழுக்குன்றப் பதிகம் (30)
20 ஏனைய பதிகங் கள் போலப் பொருளாலும் தன்மையாலும் பெயர் பெறாது பாடிய தலத்தால் பெயர்பெற்றது. இத்தலத்துப் பதிகம் என்பது கருதத்தக்கது. இப்பதிகம் ஏழு திருப்பாடல்களைக் கொண்டது. இப்பதிகத்தைப் பற்றிய பழைய குறிப்பு "குரு தரிசனம் - பசுத்துவம் கெட்டஇடம்’ என்பது. ஆன்ம இயல்பு கெட்டு இருவினையொப்பு மலபரிபாகத்திற்கு ஏற்ற

29. கழுக்குன்றம் (திருகழுக்குன்றம்), செங்கற்பட்டி விருந்து 9 கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. வடநாட்டார் பட்சிதீர்த்தம் என்பர். வேதமே மலையாதலின் வேதகிரி, வேதாசலம் என்ற பெயர்களும் உண்டு. மலையுச்சியில் அருமையாகக் குடைந்தெடுக்கப்பட்டது. இத்திருக்கோயில். கருவறைச் சுவர்களில் பல அழகிய சிவபராக்கிரம வரலாறுகள் செதுக்கப்பெற்றுள்ளன. பாடல் பெற்ற தலங்களுள் இங்கும் திருப்பரங்குன்றத்திலுமே இன்றும் பூசிக்கப் பெறும் குகைக் கோயில்கள் உள்ளன. உச்சிவேளையில் இரண்டுகழுகுகட்கு நெய்யும் சருக் கரைப் பொங்கலும் பட்சி பண்டாரம் என்பவரால் அளிக்கப் பெறுகின்றது. இராமாயண காலத்திலிருந்த சடாயு, சம்பாதி என்ற இருகழுகுகள் கழுக் குன்றத்துச்சியானை வழிபட்டதாகவும். இக்கழுகுகளின் வழித்தோன்றல்களே இப்போது வருவன என்றும் கூறப் பெறுகின்றது. மாணிக்கவாசகருக்குக் "கணக்கிலாத் இருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே’ என்று கூறப்படும் அநுபவம் நிகழ்ந்த இடம். மலைவலம் வரும் வழியிலே இன்று மாணிக்கவாசகர் கோயிலாக உள்ளது. தேவார முதவிகள் மூவரும் தங்கியிருந்த இடம் மூவர் பேட்டை என வழங்குகின்றது. உடல் நலிவுற்றவர் பலர் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி நாடோறும் மலையேறிக் கழுக்குன்றத்துச்சியானின் அருளையும் சஞ்சீவிக் காற்றின் (Ozone) தன்மையையும் ஒருங்கே பெற்று மாலையில் மலைவலம் வந்து திடம் பெறுவதால் இத் தலம் நலப்பேருர் (Sanatorium) ஆகின்றது. அடி வாரத்தில் பக்தவத்சலர் ஆலயம் உள்ளது.